www.garudabazaar.com

KRK: என் "தங்கம்".. நயன்தாரா, VJS, சமந்தா கேரக்டர் பற்றி விக்னேஷ் சிவன் வைரல் Post

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் சேதுபதி, நயன்தாரா மற்றும் சமந்தா நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கியுள்ள காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படம் நாளை வெளியாக உள்ளது.

Vignesh shivan viral pic KRK Vjs Samantha Nayanthara

Also Read | “Amazing” எனப் பாராட்டிய இயக்குனர்…“அது மட்டும் நடந்தால் என் படம் KGF”… பார்த்திபன் நெகிழ்ச்சி!

காத்து வாக்குல ரெண்டு காதல்…

’போடா போடி’, ’நானும் ரௌடிதான்’, ’தானா சேந்த கூட்டம்’ ஆகிய திரைப்படங்களுக்குப் பிறகு இயக்குனர் விக்னேஷ் சிவன் - நயன்தாரா - விஜய் சேதுபதி மற்றும் சமந்தா ஆகியோரை வைத்து ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்துக்கு விக்னேஷ் சிவனின் ஆஸ்தான இசையமைப்பாளரான அனிருத் இசையமைக்கிறார். இது அவரின் 25 ஆவது படமாகும்.  ஏப்ரல் 28 அன்று இந்த படம் ரிலீஸாகிறது. விக்னேஷ் கார்த்திக் ஒளிப்பதிவு செய்துள்ளார். ரெட்ஜெயிண்ட் மூவிஸ் நிறுவனம் இந்த படத்தை தமிழகத்தில் வெளியிடுகிறது. நாளை இந்த திரைப்படம் வெளியாகிறது.

Vignesh shivan viral pic KRK Vjs Samantha Nayanthara

இந்த படத்தில் கதீஜாவாக சமந்தாவும், கண்மணியாக நயன்தாராவும், ராம்போ என்ற கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதியும் நடிக்கிறார்கள். ஒரே நேரத்தில் இரண்டு பேரையும் காதலிக்கும் நபராக விஜய் சேதுபதியின் கதாபாத்திரம் உருவாக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் படத்தின் டிரைலர் வெளியாகி கவனத்தைப் பெற்றது. விஜய் சேதுபதியை திருமணம் செய்ய சமந்தாவும், நயன்தாராவும் போட்டி போடுகின்றனர். ஆனால் விஜய் சேதுபதியோ இருவரையும் காதலிப்பதாகவும், திருமணம் செய்துகொள்ள ஆசைப்படுவதாகவும் கூறுகிறார்.

ராம்போ, கண்மணி, கதீஜா…

இறுதியில் விஜய் சேதுபதி யாரை திருமணம் செய்துகொள்ள போகிறார் என்ற கேள்வியை எழுப்பியுள்ளது டிரைலர். டிரைலரில் ஏகப்பட்ட ஹிட் படங்களின் ரெபரன்ஸ்களை விக்னேஷ் சிவன் ரசிகர்களைக் கவரும் விதமாக இடம்பெறச் செய்துள்ளார். இந்த படத்துக்கு சென்சார் போர்டு UA சான்றிதழ் வழங்கியுள்ளது. இந்த அறிவிப்போடு வெளியான போஸ்டர் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இந்த படத்துக்கான எதிர்பார்ப்பு அதிகமாக உள்ள நிலையில் பரவலாக பல திரையரங்குகளில் சிறப்புக் காட்சிகள் ஏற்பாடு செய்யபப்ட்டுள்ளன.

Vignesh shivan viral pic KRK Vjs Samantha Nayanthara

விக்னேஷ் சிவனின் வைரல் பதிவு…

இந்நிலையில் படம் நாளை ரிலீஸ் ஆக உள்ள நிலையில் படத்தின் இயக்குனர் விக்னேஷ் சிவன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் “ நாளையில் இருந்து காத்து வாக்குல ரெண்டு காதல்…இந்த படத்தை திரையரங்குகளில் நாங்கள் கொண்டுவருவதற்கு முக்கியக் காரணம் அதீத திறமை கொண்ட விஜய் சேதுபதியின் ராம்போ கதாபாத்திரம், எப்போதும் வியப்பில் ஆழ்த்தும் என்னுடைய தங்கம் நயன்தாரவின் கண்மணி மற்றும் ஜொலிக்கும் கதீஜா ஆகியோரின் திறமையை நீங்கள் ரசிக்க வேண்டும் என்பதற்குதான்.

Vignesh shivan viral pic KRK Vjs Samantha Nayanthara

இந்த திரைப்படத்தை உருவாக்கியதற்காக இவர்கள் மூன்று பேருக்கும் நான் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன். இவர்கள் படப்பிடிப்புத் தளத்தில் கொண்டு வந்த ஆற்றலை நான் மிஸ் செய்ய போகிறேன்.ஆனால் அந்த அனுபவம் நீண்ட நாளுக்கு இருக்கும். இவர்களின் நடிப்பை திரையரங்கில் கண்டு களியுங்கள். உங்கள் அன்பையும் ஆதரவையும் எங்கள் படத்துக்குக் கொடுங்கள்” எனக் கூறியுள்ளார். இத்துடன் அவர்கள் மூவரும் இருக்கும் புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்.

Vignesh shivan viral pic KRK Vjs Samantha Nayanthara

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.

நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8

KRK: என் "தங்கம்".. நயன்தாரா, VJS, சமந்தா கேரக்டர் பற்றி விக்னேஷ் சிவன் வைரல் POST வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Vignesh shivan viral pic KRK Vjs Samantha Nayanthara

People looking for online information on Kathu vaakkula rendu kadhal, KRK movie, KRK movie Updates, Nayanthara, Samantha, Vignesh shivan, Vijay Sethupathi will find this news story useful.