Anantham
www.garudabazaar.com

KRK: வேற லெவல் waiting-ல் ரசிகர்கள்… பிரபல திரையரங்கம் வெளியிட்ட செம்ம அப்டேட்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

காத்து வாக்குல ரெண்டு காதல் படத்துக்கு சிறப்புக் காட்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டு வரும் நிலையில்  முன்பதிவு வேகமாக நடந்து வருகிறது.

KRK movie special shows increasing in theatres

Also Read | சந்தானம் ஹீரோவாக நடிக்கும் புதிய படம்.. ஜோடியான பிரபல ஹீரோயின்! செம்ம அப்டேட்

அனிருத் 25…

தானா சேந்த கூட்டம் திரைப்படத்துக்குப் பிறகு இயக்குனர் விக்னேஷ் சிவன் - நயன்தாரா - விஜய் சேதுபதி மற்றும் சமந்தா ஆகியோரை வைத்து ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்துக்கு விக்னேஷ் சிவனின் ஆஸ்தான இசையமைப்பாளரான அனிருத் இசையமைக்கிறார். இது அவரின் 25 ஆவது படமாகும்.  ஏப்ரல் 28 அன்று இந்த படம் ரிலீஸாகிறது. ரெட்ஜெயிண்ட் மூவிஸ் நிறுவனம் இந்த படத்தை தமிழகத்தில் வெளியிடுகிறது.

KRK movie special shows increasing in theatres

கதைக்களம்…

இந்த படத்தில் காதீஜாவாக சமந்தாவும், கண்மணியாக நயன்தாராவும், ராம்போ என்ற கதாபாத்திரத்தி விஜய் சேதுபதியும் நடிக்கிறார். ஒரே நேரத்தில் இரண்டு பேரையும் காதலிக்கும் நபராக விஜய் சேதுபதியின் கதாபாத்திரம் உருவாக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் படத்தின் டிரைலர் வெளியாகி கவனத்தைப் பெற்றது. விஜய் சேதுபதியை திருமணம் செய்ய சமந்தாவும், நயன்தாராவும் போட்டி போடுகின்றனர். ஆனால் விஜய் சேதுபதியோ இருவரையும் காதலிப்பதாகவும், திருமணம் செய்துகொள்ள ஆசைப்படுவதாகவும் கூறுகிறார். இறுதியில் விஜய் சேதுபதி யாரை திருமணம் செய்துகொள்ள போகிறார் என்ற கேள்வியை எழுப்பியுள்ளது டிரைலர். டிரைலரில் ஏகப்பட்ட ஹிட் படங்களின் ரெபரன்ஸ்களை விக்னேஷ் சிவன் ரசிகர்களைக் கவரும் விதமாக இடம்பெறச் செய்துள்ளார். இந்த படத்துக்கு சென்சார் போர்டு UA சான்றிதழ் வழங்கியுள்ளது. இந்த அறிவிப்போடு வெளியான போஸ்டர் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

KRK movie special shows increasing in theatres

எதிர்பார்ப்பு…

விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா, அனிருத் மற்றும் விக்னேஷ் சிவன் என ஏகப்பட்ட எண்டர்டெயினர்கள் இந்த படத்தில் இருப்பதால் படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல எதிர்பார்ப்பு உள்ளது. பல திரையரங்குகளில் காலை 4 மணிக்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னையின் முக்கியத் திரையரங்குகளில் ஒன்றான ரோகினி திரையரங்கில் காலை சிறப்புக் காட்சிக்கு ஏற்கனவே 2 திரைகள் ஒதுக்கப்பட்டு அவை அணைத்தும் முன்பதிவு செய்யப்பட்டு விட்டதால் இப்போது மூன்றாவதாக ஒரு திரையிலும் காலை சிறப்புக் காட்சிக்கு முன்பதிவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்த படத்துக்கு ரசிகர்கள் ஏகப்பட்ட எதிர்பார்ப்போடு காத்திருப்பது தெரிய வருகிறது.

KRK movie special shows increasing in theatres

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.

நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8

KRK: வேற லெவல் WAITING-ல் ரசிகர்கள்… பிரபல திரையரங்கம் வெளியிட்ட செம்ம அப்டேட்! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

KRK movie special shows increasing in theatres

People looking for online information on Kathu vaakkula rendu kadhal, KRK movie, KRK movie special shows, KRK movie Updates, Nayanthara, Samantha, Vignesh shivan, Vijay Sethupathi will find this news story useful.