www.garudabazaar.com

ஆதரவற்ற குழந்தைகளுக்கு 'வலிமை' படத்தின் சிறப்புக் காட்சி! நெகிழ வைத்த அஜித் ரசிகர்கள்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பாண்டிச்சேரி: வலிமை படத்தை ஆதரவற்ற குழந்தைகளுக்கு சிறப்புக் காட்சியை அஜித் ரசிகர்கள் காண்பித்தனர்.

valimai movie special show for orphanage children at pondy

இயக்குனர் H. வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித்குமார் நடிப்பில் உருவாகியுள்ள வலிமை படம் கடந்த (24.02.2022) அன்று திரையரங்கில் வெளியாகி உள்ளது.  தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் என 4 மொழிகளிலும் ரிலீசாகி உள்ளது. விமர்சகர்கள் மத்தியிலும், ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. வலிமை படம் BOOK MY SHOW தளத்தில் 20 லட்சத்துக்கும் மேற்பட்ட ரசிகர்களால் விரும்பப்பட்டுள்ளது.

இதுவரை இந்திய திரைப்படங்களில் அதிக ரசிகர்கள் பார்க்க ஆர்வம் காட்டும் படமாக வலிமை படம் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது.வலிமை படத்தில் வில்லனாக கார்த்திகேயாவும், அஜித்திற்கு நண்பியாக ஹூமா குரேஷி, ராஜ் ஐயப்பா நடிக்க, கதிர் கலை இயக்குனராக பணியாற்றியுள்ளார். சண்டைக்காட்சி இயக்குனராக திலிப் சுப்பராயன் பணியாற்றியுள்ளார்.

valimai movie special show for orphanage children at pondy

நிரவ் ஷா ISC ஒளிப்பதிவு செய்ய, விஜய் வேலுக்குட்டி எடிட்டராக பணியாற்றியுள்ளார். இயக்குனர் எச். வினோத் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்க, யுவன் சங்கர் ராஜா உடன் ஜிப்ரான் இசையமைத்துள்ளார். போனி கபூருடன் இணைந்து ஜி ஸ்டூடியோஸ் இந்த படத்தை தயாரித்துள்ளது.

valimai movie special show for orphanage children at pondy

வலிமை படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை மிகப்பெரிய விலைக்கு மதுரை அன்புச்செழியனின் கோபுரம் பிலிம்ஸ் கைப்பற்றியுள்ளது. தமிழகத்தில் மொத்தம் 607 திரையரங்குகளில் வலிமை படம் ரிலீசாகி உள்ளது. வலிமை படத்தை சினிமா பிரபலங்கள் பலரும் பாராட்டி வருகின்றனர். இரண்டு முறை  தேசிய விருது வென்ற தயாரிப்பாளர் BOFTA தனஞ்செயன், அருண் விஜய், வெங்கட் பிரபு, விக்னேஷ் சிவன், குஷ்பு ஆகியோரும் வலிமை படத்தை பார்த்து கருத்து தெரிவித்துள்ளனர்.

valimai movie special show for orphanage children at pondy

இந்நிலையில் ஆஸ்திரேலியாவில் வாழும் அஜித் ரசிகர் தர்ஷா என்பவர், பாண்டிச்சேரி பிரெஞ்ச் சிட்டி அஜித் ரசிகர் மன்றம் மூலம் ஆதரவற்ற 150 குழந்தைகளுக்கும் பிரத்யேகமாக சண்முகா சினிமாஸில் டிக்கெட் எடுதது பார்க்க வைத்தனர். இந்த நிகழ்வு சமூக வலைதளங்களிலும், நேரடியாக சமூகத்திலும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

தொடர்புடைய இணைப்புகள்

valimai movie special show for orphanage children at pondy

People looking for online information on Ajith Kumar, AK, Boney kapoor, H Vinoth, Valimai will find this news story useful.