Valimai BWE
www.garudabazaar.com

VIDEO: அஜித் இந்த படத்துல...போனிகபூர் கொடுத்த #AK61 படத்தின் EXCLUSIVE அப்டேட்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சென்னை: நடிகர் அஜித் - எச் வினோத் இணையும் புதிய படத்தின் EXCLUSIVE அப்டேட்டை போனிகபூர் நமது Behindwoods தளத்திற்கு வெளியிட்டுள்ளார்.

Exclusive AK 61 Movie Update from Producer Boney Kapoor

போனி கபூர் தயாரிப்பில், இயக்குனர் எச். வினோத் (H. Vinoth) இயக்கத்தில், நிரவ் ஷா ISC ஒளிப்பதிவில், யுவன் சங்கர் ராஜா (Yuvan Shankar Raja) இசையில், அஜித் (Ajith Kumar) நடிப்பில் நேர்கொண்ட பார்வை திரைப்படம் வெளியாகி வெற்றி பெற்றது.  NKP படத்தின் வெற்றிக்கு பிறகு மீண்டும் அதே கூட்டணி வலிமை படத்தில் இணைந்தது.

வலிமை படம் நேற்று (24.02.2022) திரையரங்கில் வெளியாகி உள்ளது.  தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் என 4 மொழிகளிலும் ரிலீசாகி உள்ளது. விமர்சகர்கள் மத்தியிலும், ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. வலிமை படம் BOOK MY SHOW தளத்தில் 20 லட்சத்துக்கும் மேற்பட்ட ரசிகர்களால் விரும்பப்பட்டுள்ளது.

Exclusive AK 61 Movie Update from Producer Boney Kapoor

இதுவரை இந்திய திரைப்படங்களில் அதிக ரசிகர்கள் பார்க்க ஆர்வம் காட்டும் படமாக வலிமை படம் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது.வலிமை படத்தில் வில்லனாக கார்த்திகேயாவும், அஜித்திற்கு நண்பியாக ஹூமா குரேஷி, ராஜ் ஐயப்பா நடிக்க, கதிர் கலை இயக்குனராக பணியாற்றியுள்ளார். சண்டைக்காட்சி இயக்குனராக திலிப் சுப்பராயன் பணியாற்றியுள்ளார்.

நிரவ் ஷா ISC ஒளிப்பதிவு செய்ய, விஜய் வேலுக்குட்டி எடிட்டராக பணியாற்றியுள்ளார். இயக்குனர் எச். வினோத் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்க, யுவன் சங்கர் ராஜா உடன் ஜிப்ரான் இசையமைத்துள்ளார். போனி கபூருடன் இணைந்து ஜி ஸ்டூடியோஸ் இந்த படத்தை தயாரித்துள்ளது.

 தமிழகத்தில் மொத்தம் 607 திரையரங்குகளில் வலிமை படம் ரிலீசாகி உள்ளது. வலிமை படத்தை சினிமா பிரபலங்கள் பலரும் பாராட்டி வருகின்றனர். இரண்டு முறை  தேசிய விருது வென்ற தயாரிப்பாளர் BOFTA தனஞ்செயன், அருண் விஜய், வெங்கட் பிரபு, விக்னேஷ் சிவன் ஆகியோரும் வலிமை படத்தை பார்த்து கருத்து தெரிவித்துள்ளனர்.

Exclusive AK 61 Movie Update from Producer Boney Kapoor

நடிகர் அஜித்குமார்- எச்.வினோத்- போனிகபூர் மூன்றாவது முறையாக இணையும் AK61 படத்தின் திட்டம் ஒரு ஆண்டுக்கு முன்பே முடிவு செய்யப்பட்டது. வலிமை படத்தை தொடர்ந்து அஜித்குமாரின் 61வது படம் துவங்க உள்ளது. AK61 படத்தின் படப்பிடிப்பு வரும் மார்ச் மாதம் 9 ஆம் தேதி முதல் துவங்க உள்ளது என்று நம்பத்தகுந்த தகவல்கள் கிடைத்துள்ளன.

AK 61படத்தின் முதல் லுக் உடன் போனிகபூர் டிவிட்டரில் சில நாட்களுக்கு முன் போட்டோவை பகிர்ந்துள்ளார். அதில் கருப்பு வெள்ளையில் இருள் சூழ தாடியுடன் , காதில் கடுக்கனுடன் நடிகர் அஜித் புகைப்படம் இடம் பெற்றது. AK61 படத்திற்கான முன் தயாரிப்பு என போனி கபூர் அறிவித்து இருந்தார். இந்நிலையில் போனிகபூர் Behindwoods சேனலுக்கு அளித்த பேட்டியில் அப்டேட் கொடுத்துள்ளார்.

AK61 நெகட்டிவ் ரோல் பற்றிய கேள்விக்கு. ரசிகர்களாக முடிவு செய்ததாகவும், AK61 படம் Adventure ஆகவும், ரசிகர்களை ஆர்வத்தை கிளப்பும் விதமாக இருக்கும் என கூறியுள்ளார். 

VIDEO: அஜித் இந்த படத்துல...போனிகபூர் கொடுத்த #AK61 படத்தின் EXCLUSIVE அப்டேட்! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Exclusive AK 61 Movie Update from Producer Boney Kapoor

People looking for online information on Ajith Kumar, AK61, அஜித் குமார், Boney kapoor, Valimai will find this news story useful.