www.garudabazaar.com

மாஸ் தான்.. அஜீத் நடித்த வலிமை படத்தில் ஒரே கேரக்டரில் நடித்துள்ள அம்மா & மகள்..

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சென்னை, 27, பிப்ரவரி 2022: நடிகர் அஜித் குமார் நடிப்பில் ரசிகர்கள் நீண்ட நாட்களாகவே எதிர்பார்த்து வந்த பிரபல திரைப்படம் 'வலிமை'. இப்படம் பிப்ரவரி 24-ஆம் தேதி முதல் திரையரங்குகளில் வெளியாகி வரவேற்பைப் பெற்று வருகிறது. 

actress and daughter acted in one character Ajith Valimai

படக்குழுவினர்

இயக்குனர் எச். வினோத் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ள இந்த திரைப்படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.  கலை இயக்குனராக கதிர் பணியாற்றுகிறார். அனு வர்தன் ஆடை வடிவமைப்பாளராகவும், சண்டைக்காட்சி இயக்குனராக திலிப் சுப்பராயன் ஆகியோரும் பணியாற்றுகிறார்கள். நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்துக்கு, விஜய் வேலுக்குட்டி எடிட்டராக பணியாற்றுகிறார்.

அம்மா செண்டிமெண்ட்

இந்த படத்தில் இரண்டு அம்மா பாடல்கள் பாசத்தை வெளிப்படுத்தும் வகையில் இடம் பெற்றுள்ளன. இந்த படத்துக்கு யுவன் சங்கர் ராஜா மற்றும் ஜிப்ரான் இணைந்து இசையமைத்துள்ளதாக தாமதமாக தகவல்கள் தெரியவந்தன. இயக்குநர் எச்.வினோத் இயக்கிய தீரன் திரைப்படத்துக்கு ஏற்கனவே ஜிப்ரான் இசையமைத்திருந்தார்.

actress and daughter acted in one character Ajith Valimai

இப்படத்தில் நடிகர் அஜீத்தின் தந்தையாக மறைந்த நடிகர் ஜெய்சங்கர் சித்தரிக்கப் பட்டிருப்பார். இந்த படத்தில் நடிகர் அஜீத்தின் அம்மாவாக வரும் சுமித்ராவின் பங்கு கதைக்கு முக்கியமான பகுதியாக அமைந்திருக்கும். ஆம், இந்த கதையில் அஜீத் உட்பட 3 மகன்களையும் இன்னொரு மகளையும் பெற்று வளர்ப்பார். 

அம்மாவின் பாசம்

அதில் அஜீத்தின் தம்பி ஒரு இக்கட்டில் மாட்டிக்கொள்ள, அஜீத்தின் அம்மா தன் வளர்ப்பு குறித்த சுய விமர்சனத்தை செய்துகொள்வார். இப்படி கதை அம்மாவின் பாசத்தை தாண்டி தவறான வழிக்கு போகும் இளைஞனை, அவரது அண்ணன் அஜீத் மற்றும் அம்மாவின் பாசம் எப்படி மீட்க போகிறது என்பதை நோக்கி ஆக்‌ஷன் மற்றும் மாஸ் காட்சிகளுடன் பயணிக்கும்.

அம்மாவாக நடிகை சுமித்ரா & நடிகை உமா

இதில்தான், நடிகை சுமித்ரா நடிகர் அஜீத்க்கு அம்மாவாக நடித்திருப்பார். அவருடைய கதாபாத்திரம் மிகவும் வலுவானதாக திரைக்கதையில் இடம் பெற்றிருக்கும். இதேபோல் பிளாஷ்பேக்கில் சுமித்ரா இளம் அம்மாவாக குழந்தைகளை வளர்க்கும் காட்சிகளும் காண்பிக்கப்பட்டிருக்கும். இதில் இளம் வயது அம்மாவாக, அதாவது இளம் வயது சுமித்ராவாக நடிகை  உமா நடித்திருப்பார்.

ஒரே கேரக்டரில் அம்மா, மகள்

நடிகை உமா தென்றல் உள்ளிட்ட திரைப்படங்களின் மூலம் கவனம் ஈர்த்த பிரபல தமிழ், கன்னட நடிகை ஆவார். இவர் தான் வலிமை திரைப்படத்தின் பிளாஷ்பேக் காட்சிகளில் குழந்தைகளை சிரமப்பட்டு வளர்ப்பதாக படத்தில் காண்பிக்கப்பட்டிருக்கும். நடிகை உமா, வேறு யாருமல்ல, நடிகை சுமித்ராவின் சொந்த மகள் தான்.

ஆம், நடிகை சுமித்ரா இள வயது அம்மாவாக வரும் காட்சிகளில் உமாவே நடித்துள்ளார். இப்படி வலிமை படத்தில் அம்மா, மகள் இருவரும் வெவ்வேறு காலக்கட்டங்களில் வரும் ஒரே கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

Also Read: சாத்தான் ஸ்லேவா இருப்பாரோ.. பைக்கில் வந்து அம்மன் தாலியை அடித்துச் சென்ற மர்ம நபர்!

தொடர்புடைய இணைப்புகள்

actress and daughter acted in one character Ajith Valimai

People looking for online information on Ajith Kumar, Huma Qureshi, Valimai, Valimai Amma Song, Valimai Mother Character, Valimai Mother Song, Valimai Movie will find this news story useful.