www.garudabazaar.com

"ப்பா.." அஜித் பாட்டுக்கு நடுரோட்டில் குத்தாட்டம் பிரபல சீரியல் & வலிமை பட நடிகை..

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவியில் ஒளிபரப்பான கல்யாணம் முதல் காதல் வரை சீரியல் மூலம், தமிழ் சின்னத்திரையில் அறிமுகம் ஆனவர் நடிகை சைத்ரா ரெட்டி.

Valimai fame chaitra reddy naanga vera maari dance gone viral

ரசிகரின் செயலால் நெகிழ்ந்த சன்னி லியோன்.. "கூடவே போட்ட கேப்ஷன் தான் ஹைலைட்டே"

இதனைத் தொடர்ந்து, ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான 'யாரடி நீ மோகினி' சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் சைத்ரா ரெட்டி நடித்திருந்தார்.

இதன் மூலம், தமிழக குடும்பங்கள் மத்தியில் எளிதாக சென்று சேர்ந்தார் சைத்ரா. மேலும் அவரது நடிப்பிற்கு அதிகம் பாராட்டுக்கள் கிடைத்திருந்தது. இதனால், அவருக்கு ரசிகர்களும் அதிகம் உருவாகத் தொடங்கினர்.

'கயல்' தொடர்

இதற்கு அடுத்தபடியாக, சன் டிவியில் தற்போது ஒளிபரப்பாகி வரும், 'கயல்' என்னும் தொடரின் நாயகியாக சைத்ரா ரெட்டி நடித்து வருகிறார். செவிலியராக வரும் இவர், தன்னுடைய குடும்பத்திற்காக போராடி, சந்திக்கும் சவால்கள் தான் கயல் தொடரின் கதைக்களம்.

Valimai fame chaitra reddy naanga vera maari dance gone viral

வலிமையில் முக்கிய ரோல்

இதனிடையே, ஹெச். வினோத் இயக்கத்தில், அஜித் குமார் நடித்திருந்த 'வலிமை' திரைப்படம், கடந்த பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி, திரையரங்குகளில் வெளியாகியிருந்தது. இதில், முக்கிய போலீஸ் அதிகாரி கதாபாத்திரம் ஒன்றில், சைத்ரா ரெட்டி நடித்து அதிக கவனத்தை ஈர்த்திருந்தார். அது மட்டுமில்லாமல், நடிகர் அஜித் குமாருடன் ஒரு ரசிகையாக மாறி எடுத்துக் கொண்ட புகைப்படங்களையும் சைத்ரா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருந்தார்.

அசத்தல் ரீல்ஸ் வீடியோ

இது சினிமா ரசிகர்கள் மத்தியில் அதிகம் வைரலாகி இருந்தது. இந்நிலையில், தற்போது வலிமை படத்துடன் தொடர்பு படும் ரீல்ஸ் வீடியோ ஒன்றையும், சைத்ரா ரெட்டி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதிகம் போட்டோஷூட் மற்றும் சக சீரியல் நடிகர், நடிகைகளுடன் ரீல்ஸ் வீடியோக்கள் வெளியிட்டு வருபவர் சைத்ரா ரெட்டி.

செம வைரல்

அந்த வகையில், வலிமை படத்தில் வரும் "வேற மாறி" என்ற பாடலுக்கு, கயல் நடிகர் அவினாஷ் அசோக்குடன் இணைந்து, நடனமாடி வீடியோவை வெளியிட்டுள்ளார். கயல் தொடரில் வரும் கெட்டப்பில் இருக்கும் சைத்ரா, சாலை ஒன்றில் வைத்து நடனமாடியுள்ளார். இது தெடர்பான வீடியோக்கள், தற்போது ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ள நிலையில், அதிகம் வைரலாகியும் வருகிறது.

Beast: ஜாலியோ ஜிம்கானா அர்த்தம் இதானா?... 'Lyricist' கு.கார்த்திக்.. Exclusive

தொடர்புடைய இணைப்புகள்

Valimai fame chaitra reddy naanga vera maari dance gone viral

People looking for online information on Ajith Kumar, Boney kapoor, Chaitra Reddy, Dance, H Vinoth, Valimai will find this news story useful.