www.garudabazaar.com

வலிமை பார்ட் 2 வருதா? போனிகபூர் கொடுத்த சீக்ரெட் குறிப்பு... உற்சாகத்தில் அஜித் ரசிகர்கள்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சென்னை: தயாரிப்பாளர் போனிகபூர் ரீ டிவீட் செய்த டிவிட்டால் வலிமை படம் பார்ட் 2 வருமா என கேள்விகள் எழுந்துள்ளன.

Valimai Movie Sequel Boney Kapoor Retweet went viral

வலிமை படம் 2022 பிப்ரவரி 24 ஆம் தேதி ரிலீசாகும் என புதிய போஸ்டர் மூலம் தயாரிப்பாளர் போனிகபூர் சில நாட்களுக்கு முன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளிலும் வருவதாக படத்தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது. அதனை முன்னிட்டு 'வலிமை' படம் சென்சாரகியது. CBFC சென்சாரில் U/A சான்றிதழ் பெற்றுள்ளது. மேலும் இந்த படம் 178 (2:58) மணி நிமிடங்கள் ஓடும் எனவும் அறிவிக்கப்பட்டது.

வலிமை படத்தை பார்த்த போனி கபூரின் நண்பரும், பாலிவுட்டின் சினிமா பிரமுகரும், முன்னாள் சென்சார் போர்டு ஆலோசகருமான ராஜேஷ் வாசனி படம் பற்றி முகநூலில் மிரட்டலான விமர்சனம் செய்துள்ளார். அதில், "ஜீ ஸ்டுடியோவின் பான் இந்தியா குழுவுடன் நாங்கள் படத்தைப் பார்த்தோம், படத்தை பார்த்து மிரண்டு விட்டோம்….

ஃபாஸ்ட் & ஃபியூரியஸ் & மிஷன் இம்பாசிபிள் படங்களுக்கு இந்திய சினிமாவின் பதில் தான் வலிமை, வெள்ளித் திரைகளை வலிமை படம் எரிய வைக்க போகிறது. ஷோமேன் போனி கபூரின் த்ரில்லர் உங்கள் மூச்சை இழுக்கும். புஷ்பா படம் ஆரம்பம் என்றால், வலிமை க்ளைமாக்ஸாக இருக்கும். பிப்ரவரி 24, 2022 முதல் உலகெங்கிலும் உள்ள திரையரங்குகளில் தமிழ் - தெலுங்கு - கன்னடம் - இந்தி ...!!!" என குறிப்பிட்டு இருந்தார்.

Valimai Movie Sequel Boney Kapoor Retweet went viral

இந்நிலையில் பிரபல பாலிவுட் தயாரிப்பாளரும், வினியோகஸ்தருமான சுனில் வத்வா டிவிட்டரில் ஒரு பதிவிட்டுள்ளார். அதில், வலிமை படம் ப்ளாக்பஸ்டர் வெறறி அடையும் என்றும், வலிமை த்ரில்லர் சீட் நுனிக்கு ரசிகர்களை கொண்டு செல்லும் என்றும், வலிமை படத்தின் அடுத்தடுத்த பாகங்கள் வரவேண்டும் என்றும் டிவீட் செய்துள்ளார். இதனை வலிமை தயாரிப்பாளர் போனி கபூர் ரீ டிவீட் செய்துள்ளார்.  

Valimai Movie Sequel Boney Kapoor Retweet went viral

இதன் மூலம் வலிமை படத்தின் அடுத்தடுத்த பாகங்கள் வருமா என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

தொடர்புடைய இணைப்புகள்

Valimai Movie Sequel Boney Kapoor Retweet went viral

People looking for online information on Ajith Kumar, Boney kapoor, Valimai, Valimai FDFS, Valimai Part 2, Valimai Sequel, Valimai Tickets will find this news story useful.