www.garudabazaar.com

விஜய் - சூர்யா படத்தின் வடிவேலுவின் ‘வைரல்’ கேரக்டர்.. வெச்சாச்சு புதிய படத்துக்கு டைட்டில்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் வடிவேலு நடித்த படங்களில் இன்றளவும் அவருடைய நகைச்சுவை காட்சிகள் பிரபலமாக இருக்கின்றன.

vadivelu popular character nesamani titled yogibabu ovia

நடிகர் வடிவேலு தம்முடைய நகைச்சுவை காட்சிகளில் நடைமுறை வாழ்க்கையின் சூழல்கள், நிறையவே ஒத்துப்போவது போல் நடித்திருப்பார். அவர் பேசும் வசனங்களையும், அவருடைய பாடி லாங்குவேஜையும் ரசிகர்கள் வெறித்தனமாய் அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்துகின்றனர். அந்த வகையில் வடிவேலுவையும் வாழ்க்கையையும் பிரிக்க முடியாத அளவுக்கு தினசரி வாழ்க்கையில் வடிவேலுவின் வசனங்கள் பயன்படுகின்றன.

vadivelu popular character nesamani titled yogibabu ovia

அந்த வகையில் தளபதி விஜய் நடித்த போக்கிரி திரைப்படத்தில் வடிவேலு பேசக்கூடிய லொஜக் மொஜக் பஜக் என்கிற வசனம் தற்போது ஒரு திரைப்படத்தில் பாடலாக வந்திருக்கிறது. ஆம், சுந்தர் சி இயக்கும் அரண்மனை 3-ஆம் பாகத்தில் ஆர்யா, ராஷி கண்ணா, யோகி பாபு மற்றும் பலர் நடித்திருக்கின்றனர். இந்த திரைப்படத்தில் மறைந்த நடிகர் விவேக் நடித்திருக்கிறார். வரும் அக்டோபர் 14ஆம் தேதி இந்த திரைப்படம் திரையரங்குகளில் நேரடியாக வெளியாகிறது.

vadivelu popular character nesamani titled yogibabu ovia

இதனிடையே பல மீம்ஸ்கள் எப்போதும் வடிவேலுவை வைத்து உருவாக்கப்படுகின்றன. அவ்வகையில் வடிவேலு பேசிய பிரபலமான வசனமான ‘பிளான் பண்ணி பண்ணனும்’ என்கிற வசனம் தற்போது ஒரு திரைப்படத்திற்கு டைட்டிலாக அமைந்திருக்கிறது. விஜய் டிவி பிரபலம் மற்றும் நடிகர் ரியோ ராஜ் நடிக்கும் இந்த படம் செப்டம்பர் 24-ஆம் தேதி திரையரங்கில் நேரடியாக வெளியாகிறது. 

vadivelu popular character nesamani titled yogibabu ovia

இந்த நிலையில் வடிவேலுவின் பிரபலமான கேரக்டர் இன்னொரு திரைப்படத்துக்கான தலைப்பாகி இருக்கிறது. ஆம் விஜய், சூர்யா, ரமேஷ் கண்ணா, தேவயானி மற்றும் பலர் நடிப்பில் உருவான ஃபிரண்ட்ஸ் திரைப்படம் 2001 ஆம் ஆண்டு வெளியானது. இயக்குனர் சித்திக் இயக்கிய இந்த திரைப்படம் காமெடியும் கலந்த திரைப்படமாக இருந்தாலும் நட்பின் ஆழத்தையும் பேசிய திரைப்படம் இன்று திரையுலகில் மிகப் பெரிய மாஸ் நடிகர்களாக இருக்கும் விஜய் & சூர்யா இணைந்து நடித்து மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்ற படம்.

vadivelu popular character nesamani titled yogibabu ovia

இந்த திரைப்படத்தில் வடிவேலு ஏற்று நடித்திருந்த காண்ட்ராக்டர் நேசமணி கதாபாத்திரம் வயிறு குலுங்க பார்வையாளர்களை காலம் கடந்து இன்றும்  சிரிக்க வைக்கிறது. இந்த திரைப்படத்தின் காமெடி காட்சிகளும் வடிவேலுவின் காண்ட்ராக்டர் நேசமணி என்கிற கதாபாத்திரமும் அழியாமல் நிற்கிறது என்று சொல்லலாம். சில வருடங்களுக்கு முன்பு கூட, "நேசமணிக்காக பிரார்த்தியுங்கள் - #PrayForNesamani" என்கிற Hashtag இணையதளத்தில் ட்ரெண்டாகி வந்தது.

vadivelu popular character nesamani titled yogibabu ovia

இந்த ‘காண்ட்ராக்டர் நேசமணி’பெயரில் தான் தற்போது புதிய படம் உருவாகிறது. இந்த திரைப்படத்தில் நடிக்க போவது பிக்பாஸ் பிரபலமான ஓவியா மற்றும் நடிகர் யோகி பாபு.

ஏற்கனவே பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ரியோ ராஜ், ‘பிளான் பண்ணி பண்ணனும்’ என்கிற திரைப்படத்திலும், தற்போது யோகிபாபுவுடன் ஓவியா  ‘காண்ட்ராக்டர் நேசமணி’ என்கிற இணையும் புதிய திரைப்படத்திலும் நடிக்கின்றனர். ஆக 2 பிக்பாஸ் பிரபலங்கள் வடிவேலு தொடர்புடைய தலைப்புகள் வைக்கப்பட்ட படங்களில் நடிக்கின்றனர்.

vadivelu popular character nesamani titled yogibabu ovia

காண்ட்ராக்டர் நேசமணி என்கிற இந்த திரைப்படத்தின் டைட்டில் லுக்கை இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் வெளியிட்டு இருக்கிறார். இந்த திரைப்படத்தை ஸ்வதீஷ் எம்.எஸ். இயக்குகிறார். சுபாஷ் தண்டபாணி இந்த திரைப்படத்துக்கு ஒளிப்பதிவு செய்கிறார். தர்ம பிரகாஷ் இந்த படத்துக்கு இசையமைக்கிறார். ஆன்கா மீடியா இந்த திரைப்படத்தை தயாரிக்கிறது. இந்த திரைப்படத்தின் தயாரிப்பாளர்கள் விடியல் ராஜு மற்றும் எஸ்.எஸ்.பிரபு இந்த திரைப்படத்தின் டைட்டில் லுக்கை பகிர்ந்து இருக்கின்றனர்.

vadivelu popular character nesamani titled yogibabu ovia

இதேபோல் வடிவேலுவின் பிரபலமான கேரக்டரான நாய் சேகர் எனும் டைட்டிலில் சதீஷ் ஒரு திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை அண்மையில் தான் நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய இணைப்புகள்

vadivelu popular character nesamani titled yogibabu ovia

People looking for online information on Nesamani, Oviya, Suriya, Trendin, Vadivelu, Vijay, Yogi Babu will find this news story useful.