நேர்கொண்ட பார்வை படத்தின் 'வானில் இருள்' பாடல் வீடியோ இதோ!
முகப்பு > சினிமா செய்திகள்By Behindwoods News Bureau | Aug 18, 2019 02:32 PM
அஜித் நடிப்பில் கடந்த வாரம் வெளியான நேர்கொண்ட பார்வை படத்தின் 'வானில் இருள்' வீடியோ பாடல் வெளியாகியுள்ளது

போனி கபூர் தயாரிப்பில் அஜித் குமார், வித்யா பாலன், ஷரத்தா ஸ்ரீநாத் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகவிருக்கும் படம் 'நேர்கொண்ட பார்வை'. இந்த படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா, நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளனர்.
இந்த ஆண்டு தொடக்கத்தில் விஸ்வாசம் எனும் மெஹாஹிட் படத்தைக் கொடுத்த அஜித் அடுத்த ஏழு மாதத்தில் நேர்கொண்ட பார்வைப் படத்தை ரிலிஸ் செய்ய இருக்கிறார். அஜித்தின் 59 ஆவது படமான 'நேர் கொண்ட பார்வை' திரைப்படம் வரும் ஆகஸ்ட் 8 வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.
இந்த படத்தில் அஜித்தோடு வித்யா பாலன், ஸ்ரத்தா ஸ்ரீநாத், ஆதிக் ரவிச்சந்திரன், டெல்லி கணேஷ், ரங்கராஜ் பாண்டே ஆகியோர் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்தினை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரித்துள்ளார்.
இந்நிலையில் இந்தப்படத்தின் வானில் இருள் பாடல் வெளியாகி உள்ளது இப்பாடலை பாடலாசிரியர் உமாதேவி எழுதியுள்ளார் பாடகி தீ இப்பாடலை பாடியுள்ளார்.
நேர்கொண்ட பார்வை படத்தின் 'வானில் இருள்' பாடல் வீடியோ இதோ! வீடியோ