“வாழ்க்கைல ஒவ்வொரு நிமிஷமும் மிஸ் பண்றேன்” - நேர்கொண்ட பார்வை தயாரிப்பாளர் உருக்கம்
முகப்பு > சினிமா செய்திகள்By Behindwoods News Bureau | Aug 13, 2019 01:05 PM
பாலிவுட்டின் முதல் லேடி சூப்பர் ஸ்டார் ஸ்ரீதேவி இவரின் 56 வது பிறந்தநாள் இன்று. மூன்று முடிச்சி திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமான இவர் ஏராளமான தமிழ் படங்களில் நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார்.
தமிழ் மட்டுமின்றி இந்தி, தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளிலும் பல வெற்றி படங்களை கொடுத்து தேசிய அளவில் புகழ் பெற்ற நடிகையாக திகழ்ந்தார். மயில் என்ற 16 வயதினிலே படத்தின் மூலம் அனைவரின் மனதிலும் நீங்க இடம் பிடித்தார் ஸ்ரீதேவி.
கடந்த ஆண்டு துபாய் சென்றிருந்த ஸ்ரீதேவி எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கி உயிரிழந்தார். ஸ்ரீதேவியின் 56வது பிறந்தநாளை முன்னிட்டு, அவரது ரசிகர்கள் ஏராளமானோர் சமூக வலைதளங்களில் ஸ்ரீதேவி குறித்த தங்கள் நினைவுகளை பகிர்ந்து வருகின்றனர்.
இதனிடையே, இந்தியில் வெளியான பிங்க் படத்தை தமிழில் வெளியிட வேண்டும் என்ற தனது மனைவியின் கனவு நிறைவேறி இருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக போனி கபூர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். நடிகர் அஜித் உள்ளிட்டோரின் ஆதரவு இல்லாவிட்டால் நேர்கொண்ட பார்வை படம் வெளியாகி இருக்காது என தெரிவித்துள்ள போனி கபூர், மகிழ்ச்சி தரும் நினைவாக இது எப்போதும் இருக்கும் என குறிப்பிட்டுள்ளார்.
Happy Birthday Jaan, missing you every minute of my life , keep on guiding us , you will remain with us till eternity. #Sridevi pic.twitter.com/pGPhgbmcBN
— Boney Kapoor (@BoneyKapoor) August 13, 2019