www.garudabazaar.com

Breaking: வெற்றிமாறன்-சூர்யாவின் "வாடிவாசல்" டைட்டில் லுக் எப்போ?.. வெளியான மாஸ் அப்டேட்!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தனுஷ் நடிப்பில் ‘பொல்லாதவன்’ திரைப்படத்தில் இயக்குநராக தமது திரைப் பயணத்தை தொடங்கினார் இயக்குநர் வெற்றிமாறன்.

vaadivaasal title look date announced vetrimaaran suriya

தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த ‘ஆடுகளம்’, ‘அசுரன்’ உள்ளிட்ட திரைப்படங்கள் விருதுகளைக் குவித்தன. குறிப்பாக ‘அசுரன்’ திரைப்படம் இரண்டு தேசிய விருதுகளை வென்றது. அதில் ஒன்று சிறந்த மாநில மொழித் திரைப்படம் என்பதற்காக அசுரன் படத்துக்கும், இன்னொன்று சிறந்த நடிப்பிற்காக நாயகன் தனுஷ்க்கும் கிடைத்தது.

இதனைத் தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கக்கூடிய அடுத்த திரைப்படத்திற்கான ஆவல் அதிகரிக்கத் தொடங்கியது. அந்த வகையில் நடிகர் விஜய் சேதுபதி மற்றும் சூரி நடிப்பில் வெற்றிமாறன், ‘விடுதலை’ எனும் திரைப்படத்தை இயக்கி வரும் தகவல் வெளியானது. இளையராஜா இசையமைக்கும் இந்த திரைப்படத்தில் சூரி நாயகனாக நடிக்கிறார். இந்த திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ஏற்கனவே வெளியாகியிருந்தது.

இதனிடையே வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் சூர்யா, நடிப்பதாக வெளியான செய்தி ரசிகர்களை குஷிப்படுத்தியது. சி.சு.செல்லப்பாவின் ‘வாடிவாசல்’ என்கிற நாவலை அடிப்படையாக வைத்து உருவாகும் இந்த திரைப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். இதற்கென இசை அமைக்கும் பணிகள் தொடங்கி விட்டதாக ஏற்கனவே ஜி.வி.பிரகாஷ் தம்முடைய சமூகவலைதளத்தில் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில்தான், ‘வாடிவாசல்’ திரைப்படத்தின் டைட்டில் லுக் 2021 ஜூலை 16, மாலை வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வெற்றிமாறன் மற்றும் சூர்யா இருவரும் முதல் முறையாக இணையும் இந்த படத்தின் ‘டைட்டில் லுக்கிற்காக ரசிகர்கள் வெறித்தனமாக காத்திருக்கின்றனர்.

ALSO READ: “தமிழ்நாட்ட ஏன் பிரிக்கணும்?.. தல சுத்துது.. நான் அரசியல் பேசலப்பா!”.. நடிகர் வடிவேலு பரபரப்பு பேட்டி Video!

தொடர்புடைய இணைப்புகள்

vaadivaasal title look date announced vetrimaaran suriya

People looking for online information on GV Prakash Kumar, Suriya, Suriya40, Suriya40firstlook, Suriya41, Suriya41firstlook, Vaadivaasal, Vetrimaaran will find this news story useful.