''நல்ல மனிதர்.. நல்ல நண்பர்..'' - நடிகர் சேது திடீர் மறைவு.. உதயநிதி ஸ்டாலின் உருக்கம்.
முகப்பு > சினிமா செய்திகள்நடிகரும் மருத்துவருமான சேதுராமனின் மறைவுக்கு உதயநிதி ஸ்டாலின் உருக்கமான இரங்கலை தெரிவித்துள்ளார்.

நடிகரும், மருத்துவருமான சேதுராமன் நேற்று மாரடைப்பு காரணமாக காலமானர். இவர் 2013-ஆம் ஆண்டு வெளியான கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தில் ஹீரோவாக சந்தானம் உடன் நடித்திருந்தார். வாலிப ராஜா, 50/50 போன்ற சில படங்களிலும் நடித்திருக்கிறார். ஆனால் இவரை நடிகராய் தெரிந்த பலருக்கும் இவர் ஒரு புகழ்பெற்ற தோல் மருத்துவர். இவருக்கு திருமணமாகி குழந்தை இருக்கிறது.
இந்நிலையில் அவரின் மறைவுக்கு நடிகர் உதயநிதி ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். ''சேதுராமன். நல்ல மனிதர், நல்ல நண்பர், சிறந்த மருத்துவர், திரைப்பட நடிகர். அவரின் அகால மரணம் என்னைப் பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சேதுவை இழந்து வாடும் அவரின் குடும்பத்தாருக்கும், அவரின் நண்பர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்'' , என பதிவிட்டுள்ளார்.
சேதுராமன். நல்ல மனிதர், நல்ல நண்பர், சிறந்த மருத்துவர், திரைப்பட நடிகர். அவரின் அகால மரணம் என்னைப் பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சேதுவை இழந்து வாடும் அவரின் குடும்பத்தாருக்கும், அவரின் நண்பர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். pic.twitter.com/GmlWiZbdRM
— Udhay (@Udhaystalin) March 27, 2020