#BREAKING : உதயநிதி ஸ்டாலின் கையில் பிரபல ஹீரோவின் தெறி மாஸ் போலீஸ் படம்.!
முகப்பு > சினிமா செய்திகள்உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் வாங்கியிருக்கும் திரைப்படம் குறித்து தகவல் தெரியவந்துள்ளது.

தமிழ் சினிமாவில் பிசியாக நடித்து வருபவர் உதயநிதி ஸ்டாலின். இவர் நடித்த ஓகே ஓகே, மனிதன் உள்ளிட்ட படங்கள் இவருக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை ஏற்படுத்தியது. அண்மையில் இவர் நடிப்பில் வெளியான சைக்கோ படமும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இதனிடையே உதயநிதியின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் பிரபல ஹீரோ படத்தின் திரையரங்க உரிமையை பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
சிபிராஜ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் வால்டர். சமுத்திரக்கனி, நட்டி உள்ளிட்டோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். போலீஸ் கதாபாத்திரத்தில் சிபிராஜ் நடிக்கும் இத்திரைப்படத்தின் தமிழ்நாடு திரையரங்க உரிமையைதான் உதயநிதியின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து வரும் 13-ஆம் தேதி முதல் வால்டர் வெளியாகவுள்ளது.