‘துப்புனா தொடச்சிக்குவேன்..’- நாஞ்சில் சம்பத்தின் வீடியோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

‘கனா’ திரைப்படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் தயாரிப்பில் வெளியான ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’ படத்தில் இடம்பெற்ற ‘துப்புனா தொடச்சிக்குவேன்’ என்ற பாடலின் வீடியோ வெளியாகியுள்ளது.

Thuppuna Thodachukkuven Video song from Nenjamundu Nermaiyundu Odu Raja is out

சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் பேனரின் கீழ் கார்த்திக் வேணுகோபாலன் இயக்கத்தில் கடந்த ஜூன்,14ம் தேதி வெளியான இப்படத்தின் மூலம் விஜய் டிவி பிரபலம் ரியோ ராஜ் நாயகனாக அறிமுகமானார். ஷிரின் காஞ்வாலா, ராதாரவி, ஆர்.ஜே விக்னேஷ்காந்த், ராம் நிஷாந்த், வி.ஜே சித்து, நாஞ்சில் சம்பத் உள்ளிட்டோர் நடித்த இப்படத்திற்கு ஷபிர் இசையமைத்திருந்தார், யு.கே.செந்தில்குமார் ஒளிப்பதிவு செய்தார்.

காமெடி கலந்த அரசியல் திரைப்படமாக வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற இப்படத்தில் இடம்பெற்ற ‘துப்புனா தொடச்சிக்குவேன்’ பாடலின் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. நாஞ்சில் சம்பத் கூறிய வசனத்தைக் கொண்ட இப்பாடல் அரசியல்வாதிகளை கலாய்க்கும் விதமாக உள்ளது. அந்தோனி தாசன் பாடிய இப்பாடலை குமரன் குமணன் எழுதியுள்ளார்.

‘துப்புனா தொடச்சிக்குவேன்..’- நாஞ்சில் சம்பத்தின் வீடியோ வீடியோ