Game Over Others Banner USA
Fakir Other Banner USA

மிச்சர் திம்பியா..? சின்னத்தால் ஏற்படும் கலகம்: நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா வீடியோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

‘கனா’ திரைப்படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’ திரைப்படத்தின் ஸ்னீக் பீக் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

Rio Raj's Nenjamundu Nermaiyundu Odu Raja sneak peek video is released

சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் பேனரின் கீழ் கார்த்திக் வேணுகோபாலன் இயக்கியுள்ள இப்படத்தில் விஜய் டிவி பிரபலம் ரியோ ராஜ் நாயகனாக நடித்துள்ளார். மேலும், ஷிரின் காஞ்வாலா, ராதாரவி, ஆர்.ஜே விக்னேஷ்காந்த், நாஞ்சில் சம்பத் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஷபிர் இசையமைத்துள்ள இப்படத்திற்கு யு.கே.செந்தில்குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இந்நிலையில் இப்படத்தின் ஸ்னீக் பீக் வீடியோவை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். நாசா முன்னேற்ற கழகத்தின் சார்பாக ‘யுகே நகர்’ தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் தனது சின்னத்தை அறிமுகம் செய்து அலப்பறை கூட்டிய வீடியோ ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது.

மிச்சர் திம்பியா..? சின்னத்தால் ஏற்படும் கலகம்: நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா வீடியோ வீடியோ