www.garudabazaar.com
iTechUS

Thunivu : துணிவு இப்போ நம்பர் 1-ஆ..? தெறிக்கவிட்ட கரன்ஸி போஸ்டர்.. அடுத்து நடந்த சம்பவம்..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் அஜித்குமார்- H.வினோத்- போனிகபூர் மூன்றாவது முறையாக இணையும் படம் 'துணிவு'.

Thunivu Currency note poster mentioned No.1 Netflix OTT

பொங்கலை முன்னிட்டு நேற்று முன்தினம் (11.01.2023)  துணிவு படம் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. அதிகாலை 1 மணிக்கு துணிவு படத்தின் முதல் காட்சி தமிழகமெங்கும் திரையிடப்பட்டது.

இப்படத்துல் நடிகர் அஜித், மஞ்சு வாரியர், ஜான் கொக்கன், வீரா, சமுத்திரக்கனி, மகாநதி சங்கர், பிக்பாஸ் அமீர், பாவனி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இந்த படத்திற்கு நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார்,   கலை இயக்குனராக மிலன் பணிபுரிந்துள்ளார்,  இந்த படத்தின் இசையமைப்பாளராக ஜிப்ரான் பணிபுரிந்துள்ளார். எடிட்டராக விஜய் வேலுக்குட்டியும் சண்டை காட்சிகளை சுப்ரீம் சுந்தரும் வடிவமைப்பு செய்துள்ளனர்.

துணிவு படத்தின் தமிழக ரிலீஸ் உரிமத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படத்தின் ஒட்டுமொத்த வெளிநாட்டு உரிமத்தை லைக்கா நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

மேலும் இந்த படத்தின் சேட்டிலைட் டிவி ஒளிபரப்பு உரிமத்தை கலைஞர் தொலைக்காட்சி கைப்பற்றி உள்ளது. ஓடிடி ஒளிபரப்பு உரிமத்தை நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. ‌

இந்நிலையில் நெட்ஃபிளிக்ஸில் துணிவு படம் ஸ்ட்ரீம் ஆவது குறித்த பதிவை, கரன்சி நோட் கொண்டு உருவாக்கப்பட்ட துணிவு போஸ்டர் மூலம் அதிகாரப்பூர்வமாக நெட்பிளிக்ஸ் ட்வீட் செய்துள்ளது. இதில் நோ கட்ஸ் நோ குளோரி, நான்கு புறமும் நம்பர் 1 ஆகியவை குறிப்பிடப்பட்டுள்ளன. வங்கியை மையமாக வைத்த கதை என்பதால் கரன்சி நோட்டில் இந்த போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Thunivu Currency note poster mentioned No.1 Netflix OTT

இதேபோல்,நெட்ஃபிளிக்ஸின் டாப் 10 திரைப்படங்களில் துணிவு படத்தின் தமிழ், இந்தி, தெலுங்கு பதிப்பு மொழிகள் இடம்பெற்றுள்ளன. 

தொடர்புடைய இணைப்புகள்

Thunivu Currency note poster mentioned No.1 Netflix OTT

People looking for online information on Ajith Kumar, Netflix India, Thunivu will find this news story useful.