www.garudabazaar.com

‘தளபதி’ விஜய்.. ‘தல’ தோனி.. ஷூட்டிங்கில் சந்திப்பு.. இணையத்தை கலக்கும் மேலும் பல Photos!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தளபதி விஜய் கடைசியாக லோகேஷ் கனகராஜ் இயக்கிய மாஸ்டர் படத்தில் காணப்பட்டார்.

thalapathy vijay thala ms dhoni meet gokulam studios trending

இந்த படத்தில் தளபதி விஜயுடன் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா ஜெராமியா, அர்ஜுன் தாஸ், சாந்தனு பாக்யராஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இதனை அடுத்து ‘டாக்டர்’ பட இயக்குநர் நெல்சன் திலீப்குமாருடன் இணைந்து தளபதி விஜய், தமது 65வது படமான பீஸ்ட் படத்தில் பூஜா ஹெக்டேவுடன் இணைந்து நடிக்கிறார்.

அனிருத் இசையில், மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்துக்கு ஜானி மாஸ்டர் நடனப்பயிற்சி அளிக்கிறார். தற்போது சென்னையில் நடக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பில் நடிகர் விஜய் ஈடுபட்டுள்ளார். இந்த படப்பிடிப்பு தளத்தில் தளபதி விஜய் மற்றும் தல தோனி ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் தரும் ஒரு தரமான சம்பவம் நடந்துள்ளது.

ஆம், சென்னையில் உள்ள கோகுலம் ஸ்டூடியோவில் தளபதி விஜய் பீஸ்ட் படப்பிடிப்பில் பங்கேற்க சென்றார்.

இந்த நிலையில், அதே ஸ்டூடியோவில் விளம்பரத்திற்கான படப்பிடிப்பில் இருந்த கிரிக்கெட் வீரர் ‘தல’ தோனி, தளபதி  விஜய்யை அவரது கேரவனில் சந்தித்து சிறிது நேரம் உரையாடியுள்ளார்.

thalapathy vijay thala ms dhoni meet gokulam studios trending

இதேபோல் பீஸ்ட் படத்தின் இயக்குநர் நெல்சன் திலீப்குமாரும் தோனி மற்றும் தளபதி விஜய்யுடன் இந்த சந்திப்பில் இணைந்துள்ளார். 

இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.  மாஸ்டர் படத்தின் இணை தயாரிப்பாளர் ஜெகதீஷ், தமது ட்விட்டர் பக்கத்தில் இது தொடர்பான புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.

Also Read: வலிமை 2-வது சிங்கிள் ரெடி ஆயிடுச்சா?... பிரபல இயக்குநர் தந்த வேறமாரி அப்டேட்! தீயாய் பரவும் Video!

மேலும் செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

thalapathy vijay thala ms dhoni meet gokulam studios trending

People looking for online information on Beast, MS dhoni, Nelson Dilipkumar, Thalapathy65, ThalapathyVijay, Trending, Vijay will find this news story useful.