www.garudabazaar.com

விஜய் - லோகேஷ் இணையும் தளபதி 67.. டிவிட்டரில் Bio-வை மாற்றிய பிரபல இயக்குனர்! போடு

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கோலிவுட்டில் உள்ள முன்னணி ஹீரோக்களில் ஒருவர் விஜய்.

Thalapathy 67 writer Ratna Kumar Changed His Twitter Bio

Also Read | விஜய் நடிக்கும் 'வாரிசு'.. சென்சார் REPORT-உடன் வெளியான டிரெய்லர் அப்டேட்..!

இளைய தளபதி & தளபதி என்று ரசிகர்களால் அழைக்கப்படுபவர். விஜய் தமிழகத்தில் மட்டுமல்லாது பரவலான ரசிகர்களை அண்டை மாநிலங்களிலும் கொண்டுள்ளார்.

நெல்சன் இயக்கிய 'பீஸ்ட்' படத்தில் விஜய் கடைசியாக  திரையில் காணப்பட்டார். பீஸ்ட் திரைப்படம் கடந்த ஏப்ரல் மாதம் 14 ஆம் நாள் ரிலீஸ் ஆனது.

Beast படத்திற்கு பிறகு 'வாரிசு' படத்தில் விஜய் நடிக்கிறார். இப்படத்தை வம்சி பைடிபல்லி இயக்குகிறார்.

Thalapathy 67 writer Ratna Kumar Changed His Twitter Bio

ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் பேனரில் தில் ராஜு மற்றும் ஷிரிஷ் தயாரிக்கும் இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார்.  பொங்கலுக்கு இந்த படம் ரிலீஸ் ஆக உள்ளது.

வாரிசு படத்தினை தொடர்ந்து நடிகர் விஜய்யின் அடுத்த 67வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளார். இந்த படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Thalapathy 67 writer Ratna Kumar Changed His Twitter Bio

இந்நிலையில் தளபதி 67 படத்தில் பணிபுரியும் பிரபல இயக்குனர் & வசனகர்த்தா ரத்ன குமார், தனது டிவிட்டர் பக்கத்தின் பயோவில் தளபதி 67 படத்தின் வசனகர்த்தாவாக பணிபுரிய உள்ளதை அதிகாரப்பூர்வமாக குறிப்பிட்டுள்ளார். தற்போது அவரது டிவிட்டர் பயோவின் ஸ்கிரீன் ஷாட் வைரலாக ரசிகர்கள் மத்தியில் பரவி வருகிறது.

ரத்னகுமார் ஏற்கனவே மேயாத மான், ஆடை, குளுகுளு ஆகிய படங்களை இயக்கியவர். விக்ரம், மாஸ்டர் படங்களில் வசனகர்த்தாவாக பணிபுரிந்தவர்.

Also Read | பிரபல பாலிவுட் நடிகருக்கு முத்தம் கொடுத்த தமன்னா.. வைரலாகும் கோவா பார்ட்டி வீடியோ!

தொடர்புடைய இணைப்புகள்

Thalapathy 67 writer Ratna Kumar Changed His Twitter Bio

People looking for online information on Lokesh Kanagaraj, Ratna Kumar, Thalapathy 67, Varisu, Vijay will find this news story useful.