'என்ன கொன்னுடாதிங்க ப்ரோ...’ சித் ஸ்ரீராமுக்கு வேண்டுகோள் வைத்த ’தளபதி64’ நடிகர்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சரத்குமார், விக்ரம் பிரபு, சாந்தனு, ராதிகா, ஐஷ்வர்யா ராஜேஷ், மடோனா செபாஸ்டியன் ஆகியோர் நடிக்கும் ‘வானம் கொட்டட்டும்’ படத்துக்கு மணிரத்னம் கதை எழுத, தனா இயக்குகிறார். மணிரத்னத்தின் சொந்த படத் தயாரிப்பு நிறுவனமான ’மெட்ராஸ் டாக்கீஸ்’ இப்படத்தை தயாரிக்கிறது.

Thalapathy 64 actor requests Sid Sriram through his fun tweet.

அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் வெளியாக உள்ள இந்த படத்துக்காக சித் ஸ்ரீராம் இசையமைத்த பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. குறிப்பாக அப்படத்தில் இடம்பெறும் ’கண்ணு தங்கம் ராசாத்தி’ பாடலை சரத்குமார், தன் மனைவி ராதிகாவுடன் பாடி வெளியிட்ட வீடியோ பிரபலம் அடைந்தது.

இந்நிலையில் தற்போது அதே போன்ற ஒரு வீடியோவை நடிகர் சாந்தனுவும், தன் மனைவி கீர்த்தியோடு வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

My version of #KannuThangom 💛@sidsriram don’t kill me bruhh 😅

Hey ppl...shoot your version of this song & send them to us..

Some special prizes waiting for the lucky winners💛😉

Can’t wait for u all to watch #VaanamKottatum #KannuThangomContest @MadrasTalkies_ @KikiVijay pic.twitter.com/UMA44VQEPP

— Shanthnu 🌟 ஷாந்தனு Buddy (@imKBRshanthnu) December 17, 2019