ரன்பீர் கபூருடன் இணையும் 'தளபதி 64' பட ஹீரோயின் ? - விவரம் இதோ
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Dec 11, 2019 10:40 AM
லோகேஷ் கனகராஜ் இயக்கும் 'தளபதி 64' படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடிக்கிறார். இந்த படத்தை எக்ஸ்பி ஃபிலிம் கிரியேட்டர்ஸ் சார்பாக சேவியர் பிரிட்டோ தயாரிக்கிறார்.

சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். இந்த படத்தில் விஜய் சேதுபதி, சாந்தனு, ஆண்டரியா, அர்ஜூன் தாஸ், ஸ்ரீமன், பிரேம் என ஒரு நட்சத்திர பட்டாளமே நடிக்கின்றனர்.
இந்நிலையில் நடிகை மாளவிகா மோகனன் மற்றும் பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூரும் இணைந்திருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஒரு விளம்பரப் படத்தின் படப்பிடிப்பின் போது இந்த புகைப்படங்கள் எடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
Tags : Malavika Mohanan, Ranbir Kapoor