தளபதி 64 ஷூட்டிங்கில் விஜய்.... ரியல் வெறித்தனத்தை காட்டிய ரசிகர்கள்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

'பிகில்' படத்துக்கு கிடைத்த மாபெரும் வெற்றிக்கு பிறகு தளபதி விஜய் தற்போது 'தளபதி 64' படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

Karnataka Vijay fans brought Huge Garland for Vijay at Thalapathy 64 Shoot

இதனையடுத்து கர்நாடகாவைச் சேர்ந்த விஜய் ரசிகர்கள் அவருக்கு மாபெரும் வரவேற்பை அளிக்கும் பொறுட்டு ராட்சத பூ மாலையை கிரேன் உதவியுடன் கொண்டு வரும் காட்சி வைரலாகி வருகிறது. முன்னதாக தளபதி விஜய், தனது ரசிகர்களை பார்வையிட்டு, அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டதாக கூறப்படுகிறது.

'தளபதி 64' படத்தில் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், சாந்தனு, ஆண்ட்ரியா, அர்ஜூன் தாஸ், விஜய் டிவி புகழ் தீனா என ஒரு பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்து வருகின்றனர். இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்க, சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்து வருகிறார். இந்த படத்தை எக்ஸ்பி ஃபிலிம் கிரியேட்டர்ஸ் சார்பாக சேவியர் பிரிட்டோ தயாரிக்கிறார்.