BGM Shortfilms 2019

தமிழ்நாட்டில் 5 நாட்களில் 'நேர்கொண்ட பார்வை' படத்தின் வசூல் எவ்வளவு தெரியுமா?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஸ்வாசம் படத்துக்கு கிடைத்த மாபெரும் வரவேற்புக்கு பிறகு தல அஜித் நடித்து ஆகஸ்ட் 8 ஆம் தேதி வெளியான படம் 'நேர்கொண்ட பார்வை'.  இந்த படத்தை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்க, ஹெச்.வினோத் இயக்கியுள்ளார்.

Thala Ajith and Yuvan's Nerkonda Paarvi Collection is here

இந்த படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, நீரவ் ஷா இந்த படத்துக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக வித்யா பாலன் நடிக்க, ஷரத்தா ஸ்ரீநாத், அபிராமி, ஆண்ட்ரியா, அர்ஜுன் சிதம்பரம், ஆதிக் ரவிச்சந்திரன், ரங்கராஜ் பாண்டே உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.

இந்த படம் விமர்சன ரீதியாக ஏற்கனவே நல்ல வரவேற்பை  பெற்றுள்ளது. இதனையடுத்து இந்த படம் தமிழ் நாடு முழுவதும் ஐந்து நாட்களில் ரூ.45.7 கோடி வசூல் செய்துள்ளதாக எங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது.