Reliable Software
www.garudabazaar.com

கலைஞரை மேற்கோள் காட்டி புதிய முதல்வருக்கு சூர்யாவின் வாழ்த்தும் கோரிக்கையும்.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக பெரும்பான்மை இடங்களை கைப்பற்றி வெற்றி பெற்றதையடுத்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று தமிழக முதல்வராக பதவியேற்கிறார்.

Suriya quotes kalaignar words and wishes MK Stalin

இதனையடுத்து அவருக்கு பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகர் சூர்யா அகரம் ஃபவுண்டேசன் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்து இருக்கிறார். இதுபற்றிய தம்முடைய அறிக்கையில் ‘முடியுமா நம்மால்?’ என்பது தோல்விக்கு முன்பு வரும் தயக்கம்.. ‘முடித்தே தீருவேன்’ என்பது வெற்றிக்கான தொடக்கம் என்கிற முத்தமிழறிஞர் கலைஞரின் வரிகளை மேற்கோள் காட்டியுள்ள சூர்யா, ‘முடித்தே தீர வேண்டிய’ பல காரியங்கள் வரிசைகட்டி முன் நிற்க சட்டமன்றத் தேர்தலில் மகத்தான வெற்றி பெற்று மக்களின் முதல்வராக பொறுப்பேற்றுள்ள மாண்புமிகு திரு.மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு எனது நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள்.

சுவாசிப்பதற்கு உயிர் காற்று கூட கிடைக்காமல் மக்கள் அல்லல் படுகிற இந்த பேரிடர் காலத்தில் நீங்கள் ஆட்சிப் பொறுப்பிற்கு வந்திருப்பது மிகுந்த நம்பிக்கையை அளிக்கிறது. தங்கள் ஆட்சியில் அனைத்து துறைகளிலும் தமிழகம் வளர்ச்சி அடையும் என்று நம்புகிறோம்.

Suriya quotes kalaignar words and wishes MK Stalin

தங்களுக்கும் ஆற்றலும் அனுபவமும் நிறைந்த மாண்புமிகு தமிழக அமைச்சர் பெருமக்களுக்கும் மனப்பூர்வமான வாழ்த்துக்கள். தமிழகத்தின் உரிமைகளை மீட்க தமிழர்களின் ஒருமித்த குரலாக இனி உங்கள் குரல் ஒலிக்கட்டும். அன்புடன் சூர்யா” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

தொடர்புடைய இணைப்புகள்

Suriya quotes kalaignar words and wishes MK Stalin

People looking for online information on Karunanithi, MKStalin, Suriya will find this news story useful.