www.garudabazaar.com

"தமிழை காப்பாத்துறத முதன்மை பொறுப்பா வெச்சுக்கங்க!".. ஸ்டாலினுக்கு பாரதிராஜா வாழ்த்து!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் வெற்றி பெற்று திமுக ஆட்சியை பிடித்துள்ளது.

Bharathiraja wishes MKStalin on behalf of TFAPA

இந்த நிலையில் மு.க.ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோருக்கு பல பிரபலங்களும் திரைப் பிரபலங்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு இயக்குநர் பாரதிராஜா தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். 

Bharathiraja wishes MKStalin on behalf of TFAPA

பாரதிராஜா இது பற்றிய தம்முடைய அறிக்கையில், “தமிழக அரசின் புதிய முதலமைச்சராக பொறுபேற்க இருக்கும் மாண்புமிகு திரு மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு வாழ்த்துக்கள்!” என்று தொடங்கி, “ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை வைத்து ஓட்டளித்த அனைத்து தமிழக மக்களுக்கும் நன்றிகள் பகிரும் வேளையில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் அரசுக்கும், முதல்வர் வேட்பாளராக வெற்றி பெற்றிருக்கும் நண்பர் திரு மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும் என் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

Bharathiraja wishes MKStalin on behalf of TFAPA

சென்னை மாநகர மேயராக பணியாற்றியபோது மிகச் சிறந்த நிர்வாகியை கண்டிருக்கிறோம். அதேபோல் புதிய மாற்றங்களைக் கொண்டுவரும் நிர்வாகத்தை தங்களின் தலைமையில் அமையவுள்ள அரசிடம் இருந்து எதிர்நோக்கி காத்திருக்கிறோம். தந்தையின் வழியில் தமிழின் மேன்மைகளை பாதுகாத்து தமிழக உரிமைகளை மீட்டெடுத்து தமிழையும் தமிழர்களையும் காக்க வேண்டிய பொறுப்பை முதன்மையானதாக எடுத்துக்கொள்ள தங்களைக் கேட்டுக் கொள்கிறேன். திரைத்துறை சார்ந்த நலங்களை இன்னும் சிறப்பாக்குவீர்கள் என்ற நம்பிக்கையும் இருக்கிறது. மக்கள் எதிர்பார்த்த ஒரு பெரிய மாற்றத்தை தருவீர்கள் என்ற நம்பிக்கையும் உள்ளது.

Bharathiraja wishes MKStalin on behalf of TFAPA

கொரோனா காலகட்டம். மிகவும் சவாலான நாட்கள் தங்கள் முன் நிற்கிறது. பொருளாதார பிரச்சனைகளை சரி செய்து மக்களை பாதுகாக்க, உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள உங்களை எதிர்நோக்கி இருக்கிறோம். உங்கள் வெற்றி பல நல்லவற்றை தமிழகத்திற்கு கொண்டு வரட்டும்.

Bharathiraja wishes MKStalin on behalf of TFAPA

மக்களின் பக்கம் நின்று பார்க்கும் தன்மை உங்களுக்கு அதிகம் உண்டு என்பதால் நல்லாட்சியை எதிர்பார்த்து மனம் நிறை மகிழ்வுடன் எனது வாழ்த்துக்களை தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் சார்பாக தெரிவித்துக் கொள்கிறேன். நன்றி. உங்கள் பாசத்துக்குரிய பாரதிராஜா!” என்று தெரிவித்திருக்கிறார்.

ALSO READ: வாழ்த்து சொன்ன 'இசைப்புயல்'! .. பதிலுக்கு 'தளபதி' என்ன சொல்லிருக்காரு பாருங்க.. பரபரப்பு ட்வீட்!

தொடர்புடைய இணைப்புகள்

Bharathiraja wishes MKStalin on behalf of TFAPA

People looking for online information on Bharathiraja, DMK, MKStalin will find this news story useful.