Breaking: இந்த தமிழ் புத்தாண்டுக்கு சூப்பர் ஸ்டாரின் தர்பார்... எப்போ ? எந்த சேனல்ல தெரியுமா ?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து கடந்த பொங்கலை முன்னிட்டு ஜனவரி 9 ஆம் தேதி வெளியான படம் 'தர்பார்'. லைக்கா புரொக்ஷன்ஸ் தயாரித்திருந்த இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

Superstar Rajinikanth and Nayanthara's Darbar will telecast on Sun TV on Tamil New Year | சூப்பர் ஸ்டாரின் தர்பார் திரைப்படம் பிரபல டிவியில் தமிழ் ப

இந்த படத்தில் நயன்தாரா, நிவேதா தாமஸ், சுனில் ஷெட்டி, யோகி பாபு, பேபி மானஸ்வி, ஸ்ரீமன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். இந்த படத்துக்கு அனிருத்தின் பாடல்கள் பெரும் பலமாக அமைந்திருந்தது. சந்தோஷ் சிவன் இந்த படத்துக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இந்நிலையில் இந்த படம் வருகிற தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ஏப்ரல் 14 ஆம் தேதி சன் டிவியில் ஒளிபரப்பப்படலாம் என எங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது. இதற்கான புரோமோ விரைவில் ஒளிபரப்பப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Entertainment sub editor