இது சூப்பர் ஸ்டாரின் Man Vs Wild... கொல மாஸு டீஸர் வீடியோ.. படத்துல கூட தலைவர் இவ்ளோ ஸ்டைலா இல்ல

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சமீபத்தில் பியர் கிரில்ஸ் தொகுத்து வழங்கும் மேன் vs வைல்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சி டிஸ்கவரி சேனலில் ஒளிபரப்பாகவிருக்கிறது. இந்த நிகழ்ச்சியின் புரோமோ சமீபத்தில் வெளியாகி வைரலானது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் பியர் கிரில்ஸ் மேன் விஎஸ் வைல்டு டீஸர் | Superstar Rajinikanth and Bear Grylls Man vs W

இந்நிலையில் இந்த நிகழ்ச்சியின் டீஸர் தற்போது வெளியாகியுள்ளது. அதனை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிரந்த பியர் கிரில்ஸ், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தன்னை நோக்கி வரும் சவால்களை எதிர்கொண்ட விதத்தில் அவரது நேர்மறை மற்றும் விட்டுக்கொடுக்காத தன்மை வெளிப்பட்டது.

இந்த நிகழ்ச்சி வரும் மார்ச் 23 ஆம் தேதி இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகவிருக்கிறது. பாருங்கள் என்று தெரிவித்துள்ளார். டீஸரில் அவர் நடிக்கும் படங்களை விட கூடுதலான ஸ்டைலுடன் அவர் டாஸ்க்குகளை எதிர்கொள்ளும் விதம் என இந்த டீஸர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது சிவா இயக்கத்தில் அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்த படத்தில் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், மீனா, குஷ்பு, பிரகாஷ் ராஜ், சூரி, சதீஷ் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். டி.இமான் இந்த படத்துக்கு இசையமைக்கிறார்.

Entertainment sub editor