விஜய் படத்தின் நடிகை.. இப்போது இயக்குநர் ஆகிறார் - கௌதம் மேனன் சொல்லும் புதிய தகவல்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகை காவேரி என்கிற கல்யாணி தற்போது புதிதாக ஒரு படத்தை தயாரித்து இயக்கவுள்ளதாக தெரிய வந்துள்ளது.

விஜய்யுடன் நடித்த நடிகை இயக்குநர் அவதாரம் | vijay's kannukkul nilavu actress kaveri aka kalyani turns director starring chethan cheenu

விஜய் நடித்த கண்ணுக்குள் நிலவு படத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் காவேரி என்கிற கல்யாணி. மேலும் சரத்குமார், முரளி ஆகியோருடன் இணைந்து, இவர் நடித்த சமுத்திரம் படமும் ரசிகர்களை கவர்ந்தது. அதில் இவர் நடித்த தங்கை கதாபாத்திரம் இவருக்கு நல்ல வரவேற்பை ஏற்படுத்தி கொடுத்தது. தமிழ் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு சினிமாவிலும் நடித்த வந்த இவர் அண்மையில் கருப்பன் படத்தில் நடித்தார்.

இந்நிலையில் இவர் தற்போது இயக்குநர் அவதாரம் எடுக்கவுள்ளதாக அறிவிப்பு வெளியானது. இதுகுறித்த அறிவிப்பை இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார். நடிகர் சேத்தன் சீனு நடிக்கும் இத்திரைப்படத்துக்கு ப்ரொடக்‌ஷன் நம்பர் ஒன் என தற்போது பெயரிடப்பட்டுள்ளது. கே2கே ப்ரொடக்‌ஷன் சார்பாக காவேரி தயாரிக்கும் இத்திரைப்படம், தமிழ் - தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் உருவாகவுள்ளது. உண்மை நிகழ்வுகளைக் அடிப்படையாகக் கொண்ட ஒரு தனித்துவமான காதல் கதையை, உளவியல் திரில்லர் திரைப்படமாக உருவாக்கியிருக்கிறோம் என படக்குழு தெரிவித்துள்ளது.

Entertainment sub editor