ET Others
www.garudabazaar.com

மீண்டும் ஹீரோவாக கலக்கவரும் சுந்தர் சி… இணையத்தில் கவனம் பெற்ற வல்லான் டீசர்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இயக்குனரும் நடிகருமான சுந்தர் சி இப்போது மீண்டும் படங்களில் கதாநாயகனாக நடிக்க ஆரம்பித்துள்ளார்.

Sundar c acted vallan movie teaser gone viral

தமிழ் சினிமாவில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக வெற்றிகரமான கமர்ஷியல் இயக்குனராக வலம் வருபவர் சுந்தர் சி. ரஜினி, கமல், அஜித் என முன்னணி நடிகர்களை வைத்து வெற்றிப்படங்களைக் கொடுத்தவர். இடையில் நடிகராகவும் வலம் வந்த அவர் இப்போது நடிப்பு மற்றும் இயக்கம் என இரண்டு துறைகளிலும் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளார்.

தலைநகரம் தந்த வெற்றி:

முன்னணி இயக்குனராக இருந்த நேரத்தில் தன்னுடைய உதவியாளர் சுராஜ் இயக்கத்தில் உருவான தலைநகரம் படத்தில் கதாநாயகனாக அறிமுகம் ஆனார் சுந்தர் சி. அந்த படத்தின் திரைக்கதை காரணமாகவும், வடிவேலுவின் நகைச்சுவைக் காட்சிகளுக்கு கிடைத்த வரவேற்பாலும் மிகப்பெரிய வெற்றி பெற்றது அந்த படம். அந்த படத்தின் வெற்றிக்குப் பிறகு பல படங்களில் கதாநாயகனாக நடிக்க ஆரம்பித்தார். இதனால் சில வருடங்களுக்கு இயக்குனர் பொறுப்பில் இருந்து விலகியிருந்தார்.

Sundar c acted vallan movie teaser gone viral

ரி எண்ட்ரியாக அமைந்த கலகலப்பு:

இதையடுத்து அவர் சில் ஆண்டு இடைவெளிக்குப் பின்னர் இயக்கிய கலகலப்பு படம் வெற்றி பெற்றதை அடுத்து மீண்டும் இயக்கத்தில் அதிகமாக கவனம் செலுத்த ஆரம்பித்தார். அதன் பின்னர் பல படங்களை வரிசையாக இயக்கி வருகிறார். இந்நிலையில் இப்போது  இயக்கம், நடிப்பு என இரண்டிலும் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளார். அரண்மனை, இருட்டு மற்றும் முத்துன கத்திரிக்கா ஆகிய படங்களில் நடித்து வந்த அவர் இப்போது வல்லான் என்ற படத்தில் நடித்துள்ளார்.

கவனம் ஈர்த்த வல்லான்:

VR டெல்லா பிலிம் பேக்டரி சார்பாக VR மணிகண்டராமன்  பிரம்மாண்டமாக தயாரிக்க, மணி சேயோன் இயக்கத்தில் சுந்தர் C நாயகனாக நடிக்கும் “வல்லான்” படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி பலரின் கவனத்தை ஈர்த்து வருகிறது. ஹெபா படேல், தான்யா ஹோப், சாந்தினி தமிழரசன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உடன் அபிராமி வெங்கடாசலம், கமல் காமராஜ், ஜெயகுமார், அஜித் கோஷி ஆகியோர் நடிக்கின்றனர்.

Sundar c acted vallan movie teaser gone viral

மணி பெருமாள் ஒளிப்பதிவை மேற்கொள்ள சந்தோஷ் தயாநிதி இசையமைக்கிறார். இந்த படத்தின் கலை இயக்குனராக சக்தி வெங்கட்ராஜ் பணிபுரிகிறார். எக்ஸிகியூடிவ் புரொட்யூசர்  ஆக அசோக் சேகரும்,  நடன வடிவமைப்பை கல்யாண் மற்றும் சந்தோஷ் ஆகிய இருவரும் மேற்கொள்கின்றனர். சண்டைப்பயிற்சி- விக்கி நந்தகோபால், ஸ்டில்ஸ் – ராஜேந்திரன் மற்றும் மக்கள் தொடர்பு - சதிஷ் (AIM) ஆகியவர்கள் மேற்கொள்கின்றனர்.

தொடர்புடைய இணைப்புகள்

Sundar c acted vallan movie teaser gone viral

People looking for online information on Actor, Sundar C, Vallan will find this news story useful.