www.garudabazaar.com

"கொஞ்சம் நாகரீகமா பேசுங்க.." ப்ளூ சட்டை மாறனின் வலிமை விமர்சனம்.. சார்பட்டா நடிகர் அறிக்கை

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் அஜித் குமார் நடிப்பில் சமீபத்தில் வெளியாகியிருந்த திரைப்படம் 'வலிமை'. மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றிருந்த இந்த திரைப்படம், தொடர்ந்து சிறப்பாக ஓடி கொண்டிருக்கிறது.

actor request to blue sattai maaran for his review style

"விஜய் சார் பையன் என்னோட தீவிர ரசிகன்.." யுவன் பகிர்ந்த சீக்ரெட்.. விஜய் கொடுத்த சர்ப்ரைஸ்

இந்நிலையில், வலிமை படத்தை விமர்சனம் செய்திருந்த ப்ளூ சட்டை மாறன், தனிப்பட்ட நடிகர் குறித்தும் அதிகம் விமர்சனம் செய்திருந்தார்.

திரைப்பட விமர்சனம் என்பது, படத்தின் குறைகளை பற்றி பேச வேண்டுமே என்பதல்லாமல், படத்திலுள்ளவர்களை பற்றி குறை கூறக் கூடியது அல்ல என பலரும் ப்ளூ சட்டை மாறனின் விமர்சனத்திற்கு தங்களின் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

ப்ளூ சட்டை மாறன்

திரையுலக பிரபலங்கள் கூட, ப்ளூ சட்டை மாறனின் வலிமை விமர்சனத்திற்கு  எதிராக கருத்து தெரிவித்திருந்தனர். இதனையடுத்து, 'சார்பட்டா பரம்பரை' பட புகழ், நடிகர் ஜான் கொக்கன் தன்னுடைய கண்டனங்களை தற்போது பதிவு செய்துள்ளார். இது பற்றி தன்னுடைய ட்விட்டர் பக்கத்திலும் அறிக்கை ஒன்றை ஜான் வெளியிட்டுள்ளார்.

சாதாரண நடிகன்

அதில், 'நீங்கள் ஒரு பெரிய திரை விமர்சகர். நான் ஒரு சாதாரண நடிகன். நீங்கள் விமர்சனம் செய்வது குறித்து ஒரு கோரிக்கை வைக்க வேண்டியுள்ளது. சினிமா இருந்தால் நீங்களும் இருக்கிறீர்கள். சினிமா என்றாலே விமர்சனமும் சேர்ந்தது தான். விமர்சனம் சினிமாவை வளர வைப்பது. அதனால் தான் சினிமா விமர்சகன் மதிக்கப்படுகிறான்.

கோரிக்கை இது தான்

குறைகளை சுட்டிக் காட்டுவது எந்த அளவு தேவையோ, அதே அளவு பிறரை மரியாதையாக பேசுவதும் தேவை. ஒரு நடிகர் சூப்பர் ஸ்டார் ஆவதற்கு எவ்வளவு சிரமப்பட்டு அந்த இடத்திற்கு வந்து இருப்பார் என்பது உங்களுக்கே தெரியும். அவர்களைப் பற்றி விமர்சனம் செய்யும் போதாவது நாகரீகமாக விமர்சனம் செய்யுங்கள் என்பதே என் கோரிக்கை. நீங்களும் ஒரு படம் இயக்கி இருக்கிறீர்கள். அதன் வலி, வேதனை என்னவென்று உங்களுக்கும் புரியும். எந்தப் படைப்பாளியும், தன் படைப்பு வெற்றி பெற வேண்டும் என நினைத்தே படைப்பார்கள்.

actor request to blue sattai maaran for his review style

மரியாதையுடன் விமர்சியுங்கள்

தமிழ் சினிமாவைப் புரிந்து விமர்சனம் செய்யுங்கள். ஆனால், யாரையும் தனிப்பட்ட முறையில் கேவலமாக பேசுவதை தவிர்த்து மரியாதையுடன் விமர்சியுங்கள். இதுவரை நீங்கள் மோசமாக, கேவலமாக பேசிய விமர்சனங்கள் தான் அதிகம் இருக்கின்றன. அது ஒன்றும் பெரிய விஷயம் இல்லை. யார் வேண்டுமானாலும் பேசி விடலாம். திறமையாக பேசுவது தான் கடினம்.

ஆக்கப்பூர்வ விமர்சனம்

தமிழில் நல்ல சொற்கள் பல லட்சம் இருக்கின்றன. அவற்றைக் கொண்டு நல்ல மரியாதையான சொற்களால் நாகரீக விமர்சனம் செய்யுங்கள். இங்கே சினிமாவை நம்பி சினிமாவில் நிற்க வேண்டும் என்று என்னை போன்று பலர் இருக்கிறார்கள். அவர்களும் வளர வேண்டும். சினிமா இருந்தால் தான் இது எல்லாமே. அதனால், அடுத்து நீங்கள் விமர்சனம் செய்யும்போது ஆக்கப்பூர்வமாக விமர்சனம் செய்வது நல்லது.

தங்களின் விமர்சனங்கள் படைப்பாளிக்கு ஊக்கமாக இருக்க வேண்டுமே தவிர அவர்களை புண்படுத்தும் விதமாகவோ திரைப்படத்திற்கு வரும் ரசிகர்களை தடுக்கும் விதமாகவோ இருக்கக் கூடாது. நீங்கள் இதைப் புரிந்து நடப்பீர்கள் என்று நம்புகிறேன்.

அஜித் சார் ரசிகன்

இது சினிமாவில் இருக்கும் ஒரு சிறிய நடிகனாக என் கோரிக்கை. நான் அஜித் சாரின் ரசிகன். அவர் ஸ்டைலிலேயே இறுதியாக ஒன்று "நீங்க என்ன வேணா பண்ணுங்க.. உங்களுக்கு பிடிச்சத பண்ணுங்க.. ஆனா அடுத்தவன மிதிச்சி முன்னேறணும்னு நினைக்காதீங்க.. வாழு வாழ விடு" என மிக நீண்ட அறிக்கையில், ஜான் கொக்கன் குறிப்பிட்டுள்ளார்.

ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் மத்தியில், ப்ளூ சட்டை மாறன் மீது, அதிக விமர்சனங்கள் இருந்து வரும் நிலையில், நடிகர் ஜான் கொக்கன் தற்போது வெளியிட்டுள்ள அறிக்கை, மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

actor request to blue sattai maaran for his review style

மாரி செல்வராஜ் - உதயநிதி இணையும் புதிய படம்! ஷூட் எப்போ? எங்க? ஹீரோயின் யாரு?

தொடர்புடைய இணைப்புகள்

actor request to blue sattai maaran for his review style

People looking for online information on Actor request, Ajith Kumar, அஜித் குமார், சார்பட்டா நடிகர், திரைப்பட விமர்சனம், ப்ளூ சட்டை மாறன், வலிமை விமர்சனம், Blue Sattai Maaran, Review style, Valimai Movie will find this news story useful.