கொரோனா வைரஸினால் பிரபல நடிகர் பலி - அவரது மனைவி பெரும் சோகம்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

உலக அளவில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதற்கு இன்னும் தீர்வு காணப்படாததால் மக்களிடையே அச்சம் நிலவிவருகிறது.

மேலும் திரைப்பட பிரபலங்கள் கொரோனாவினால் பாதிக்கப்படும் செய்திகள் அவ்வப்போது வெளியாகி அவர்களது ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி வருகிறது. அந்த வகையில், ஸ்டார் வார்ஸ் உள்ளிட்ட படங்களில் நடித்த ஆண்ட்ரூ ஜாக் கொரோனா வைரஸ் காரணமாக மரணமடைந்துள்ளார்.

நடிகர் ஆண்ட்ரூ ஜாக்கிற்கு 76 வயதாகிறது. அவரது மறைவு ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அவரது மனைவி, கேப்ரியல் ரோஜர்ஸ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ''ஆண்ட்ரூ ஜாக்கின் மறைவு செய்தி கேட்டு என் மனம் உடைந்தது. ஆண்ட்ரூ ஜாக்கிற்கு நோய் அறிகுறி தென்பட்டு அவர் 48 மணி நேரத்திற்கு முன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.  அவருக்கு எந்த வலியும் இல்லை. அனைவரும் பாதுகாப்பாக இருங்கள்'' என்று உருக்கமாக தெரிவித்துள்ளார்.

Entertainment sub editor