LIGER D Logo Top
Tiruchitrambalam D Logo Top
www.garudabazaar.com

Brahmastra: "இந்த வருஷம்.. இந்திய திரை வரலாற்றுல.." - சென்னை பிரமாஸ்திரம் பட விழாவில் SS ராஜமௌலி.!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ரன்பீர் கபூர் மற்றும் ஆலியா பட் நடிப்பில் அடுத்த மாதம் வெளியாகவுள்ள திரைப்படம் பிரம்மாஸ்திரா.  அயன் முகர்ஜி இந்தப் படத்தை இயக்க பிரபல தயாரிப்பாளர்  கரன் ஜோகர் தயாரித்துள்ளார். பிரமாண்ட படைப்பாக பெரும் பட்ஜெட்டில் மூன்று பாகங்களாக உருவாகியுள்ள இப்படத்தின் இந்த முதல் பாகத்தை Fox Star Studios, Dharma Productions, Prime Focus மற்றும் Starlight Pictures இணைந்து இப்படத்தை வெளியிடுகின்றனர்.

SS Rajamouli Speech Brahmastra: Part One – Shiva

Also Read | 90S Kids குழந்தையா பார்த்த 'சந்திரமுகி' பொம்மியின் குழந்தை..!! வைரலாகும் க்யூட் ஃபோட்டோ..

ரன்பீர் கபூர் மற்றும் ஆலியா பட் நடிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தில் நடிகர் அமிதாப் பச்சனும் நடித்திருக்கிறார்.  தவிர, இப்படத்தில் நடிகர் ஷாருக் கான் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார்.    படத்தின் ப்ரமோஷன் இன்று சென்னையில் நடந்தது. இதில் நடிகர்கள் ரன்பீர் கபூர், நாகார்ஜூனா, இயக்குனர் ராஜமெளலிஆகியோர் கலந்துகொண்டனர். இப்படம் தென்னிந்திய மொழிகளில்  செப்டம்பர் 9-ஆம் தேதி வெளியாகிறது.

SS Rajamouli Speech Brahmastra: Part One – Shiva

இந்த நிகழ்வில் பேசிய நாகார்ஜூனா, “இயக்குனர் அயன் ஒரு காமிக் புத்தகத்தை என்னிடம் கொண்டு வந்து எனது கதாபாத்திரத்தை பற்றி சொன்னார். நந்தி அஸ்திரத்தை மையப்படுத்தி எனது அந்த கதாபாத்திரம் இருந்தது. எப்போதுமே எனக்கு இதிகாசங்கள் மேல் ஈர்ப்பு இருந்தது. இந்த படமும் இதிகாசத்தை அடிப்படையாக கொண்ட கதை என்பதாலேயே நடிக்க ஒத்துகொண்டேன். விஷுயல்கள் சிறப்பாக வந்துள்ளன. இயக்குநரின் 10 வருட உழைப்புதான் இப்படம். ரன்பீர் கபூர் மற்றும் ஆலியா பட் இருவருமே சிறந்த உழைப்பாளிகள். சினிமா மீது காதல் கொண்டவர்கள். இப்படம் பெருவெற்றி அடையும்” என்று பேசினார்.

SS Rajamouli Speech Brahmastra: Part One – Shiva

இதேபோல் இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி பேசும்போது, “இங்கு நான் ஒரு இயக்குநராக வரவில்லை. இத்திரைப்படத்தை வழங்குபவராகவே வந்துள்ளேன். இந்த வருட இந்திய திரைப்பட வரலாற்றில் பிரமாஸ்திரம் திரைப்படம் முக்கியமானதாக திகழும். நம் இதிகாசங்கள் மற்றும் புராணங்களில் இருந்து உருவான கற்பனை கதைதான் இந்த திரைப்படம். கரன் ஜோகர், அமிதாப்பச்சன், ரன்பீர் கபூர், நாகார்ஜுனா, ஆலியா பட் போன்றவர்களின் பங்களிப்பினால் இப்படம் 8 வருட கடின உழைப்புக்கு பின் உருவாகியுள்ளது. இந்த திரைப்படம் அஸ்திரங்களை பற்றி கமர்சியலாக அனைவருக்கும் பிடிக்கும் வண்ணம் எடுத்துரைக்கிறது. நானும் இந்த திரைப்படத்தில் இணைந்ததில் மகிழ்கிறேன்.” என்று குறிப்பிட்டார்.

SS Rajamouli Speech Brahmastra: Part One – Shiva

Also Read | Brahmāstra: ஆரம்பிக்கலாமா.. தமிழ்நாட்டு தலைவாழை இலை விருந்தில் நாகார்ஜூனா, ராஜமௌலி, ரன்பீர் கபூர்.!

தொடர்புடைய இணைப்புகள்

SS Rajamouli Speech Brahmastra: Part One – Shiva

People looking for online information on Brahmāstra Part One – Shiva Chennai, Nagarjuna SS Rajamouli, Ranbir Kapoor will find this news story useful.