DON FDFS.. தியேட்டரில் ரசிகர்களுடன் படம் பார்த்த சிவகார்த்திகேயன்! செம வைரல் வீடியோ.. FANS HAPPY

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சிவகார்த்திகேயன் நடித்த டான் படம் உலகெங்கும் வெற்றிகரமாக இன்று ரிலீசாகி உள்ளது.

Sivakarthikeyan Watched Don Movie FDFS at Rohini Theatre

Also Read | "சிம்பு கூட கல்யாணம் நடந்தா நல்லா இருக்கும், ஆனா" இன்ஸ்டாவில் சொன்ன Sreenidhi.. "அவங்க வெக்கத்த பாரு.."

சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள டான் படத்தில் பிரியங்கா அருள் மோகன், எஸ் ஜே சூர்யா, சமுத்திரக்கனி மற்றும் சூரி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ளார், ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்பை முறையே கே எம் பாஸ்கரன் மற்றும் நாகூரன் கையாண்டுள்ளனர்

பிரைம் மீடியா (அமெரிக்கா), யார்க் சினிமா (கனடா), பொலேய்ன் சினிமாஸ் (யுகே மற்றும் ஐரோப்பா), யுனைடெட் இந்தியா எக்ஸ்போர்ட்ஸ் (வளைகுடா, சிங்கப்பூர் மற்றும் இலங்கை), எம்கேஎஸ் டாக்கீஸ் (ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து) மற்றும் டிஎம்ஒய் (மலேசியா) ஆகியவற்றுடன் இணைந்து வெளிநாடுகளில் ஐபிக்ஸ் நிறுவனம் படத்தை வெளியிட்டுள்ளது. தமிழில் ரெட் ஜெயன்ட் மூவிஸ் வெளியிட்டுள்ளது.

Sivakarthikeyan Watched Don Movie FDFS at Rohini Theatre

டான் படத்தின் OTT ஒளிபரப்பு உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளது. சிவகார்த்திகேயன் இந்த படத்தில் கல்லூரி மாணவனாகவும் எஸ் ஜே சூர்யா கல்லூரி முதல்வராகவும் நடித்துள்ளனர். நகைச்சுவை மற்றும் காதலுக்கு முக்கியத்துவம் உள்ள படமாக டான் உருவாகியுள்ளது. திரைப்பட இயக்குனராக ஆசைப்படும் இளைஞனின் கதையாக டான் படம் உருவாகியுள்ளது.

Sivakarthikeyan Watched Don Movie FDFS at Rohini Theatre

இந்நிலையில் இன்று (13.05.2022) வெளியான டான் படத்தை சிவகார்த்திகேயன், சென்னை கோயம்பேட்டில் உள்ள ரோகினி திரையரங்கில் ரசிகர்களுடன் கண்டுகளித்தார். மேலும் ரசிகர்களின் ஆரவாரமான கொண்டாட்டத்தை வீடியோவாகவும் படம் பிடித்தார். இது குறித்த வீடியோவை SK புரொடக்ஷன்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

Sivakarthikeyan Watched Don Movie FDFS at Rohini Theatre

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.

நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க்.  https://behindwoods.com/bgm8

DON FDFS.. தியேட்டரில் ரசிகர்களுடன் படம் பார்த்த சிவகார்த்திகேயன்! செம வைரல் வீடியோ.. FANS HAPPY வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Sivakarthikeyan Watched Don Movie FDFS at Rohini Theatre

People looking for online information on Don Movie, DON movie FDFS, Don Movie Release, Priyanka Mohan, Sivakarthikeyan, Sivakarthikeyan Watch Don Movie will find this news story useful.