DON: அஜித்தின் 'வாலி' Reference.. அதகளம் செய்த SK - SJ சூர்யா! தியேட்டர்ல சும்மா தாறுமாறு மொமண்ட்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சிவகார்த்திகேயன் நடித்த டான் படம் உலகெங்கும் வெற்றிகரமாக இன்று (13.05.2022) ரிலீசாகி உள்ளது.

Ajith Kumar Vaalee Movie Reference in SivaKarthikeyan Don Movie

Also Read | சுந்தர் சி - ஜெய் நடிக்கும் த்ரில்லர் படம் "பட்டாம் பூச்சி"..வெளியான முதல் சிங்கிள் பாடல்!

சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள டான் படத்தில் பிரியங்கா அருள் மோகன், எஸ் ஜே சூர்யா, சமுத்திரக்கனி மற்றும் சூரி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ளார், ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்பை முறையே கே எம் பாஸ்கரன் மற்றும் நாகூரன் கையாண்டுள்ளனர்

Ajith Kumar Vaalee Movie Reference in SivaKarthikeyan Don Movie

சிவகார்த்திகேயன் இந்த படத்தில் கல்லூரி மாணவனாகவும் எஸ் ஜே சூர்யா கல்லூரி முதல்வராகவும் நடித்துள்ளனர். நகைச்சுவை மற்றும் காதலுக்கு முக்கியத்துவம் உள்ள படமாக டான் உருவாகியுள்ளது. திரைப்பட இயக்குனராக ஆசைப்படும் இளைஞனின் கதையாக டான் படம் உருவாகியுள்ளது. லைக்கா புரொடக்ஷன்ஸ் & SK புரொடக்ஷன்ஸ் படத்தை தயாரித்துள்ளனர். டான் படத்தின் OTT ஒளிபரப்பு உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளது.

Ajith Kumar Vaalee Movie Reference in SivaKarthikeyan Don Movie

இந்நிலையில் இன்று வெளியான டான் படத்தில் வாலி படத்தின் அஜித் - எஸ்.ஜே சூர்யா REFERENCE-கள் படத்தில் ஆங்காங்கே அமைந்துள்ளன. வாலி, ஆரம்பம் படத்தில் அஜித்தின் செய்கையான "டொக் டொக்" ஸ்டைலை S.J சூர்யாவும், சிவகார்த்திகேயனும் மாறி மாறி செய்வர். மேலும் வாலி படத்தில் வரும் ஒரு காட்சியை (சிம்ரன், வில்லன் அஜித் குறித்து புகார் கூறும் காட்சி) டான் படத்தில் மீள் உருவாக்கம் செய்துள்ளனர். அஜித் நடித்த வாலி படத்தை S.J சூர்யா இயக்கியது குறிப்பிடத்தக்கது.

Ajith Kumar Vaalee Movie Reference in SivaKarthikeyan Don Movie

இப்படத்தை பிரைம் மீடியா (அமெரிக்கா), யார்க் சினிமா (கனடா), பொலேய்ன் சினிமாஸ் (யுகே மற்றும் ஐரோப்பா), யுனைடெட் இந்தியா எக்ஸ்போர்ட்ஸ் (வளைகுடா, சிங்கப்பூர் மற்றும் இலங்கை), எம்கேஎஸ் டாக்கீஸ் (ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து) மற்றும் டிஎம்ஒய் (மலேசியா) ஆகியவற்றுடன் இணைந்து வெளிநாடுகளில் ஐபிக்ஸ் நிறுவனம் படத்தை வெளியிட்டுள்ளது. தமிழில் ரெட் ஜெயன்ட் மூவிஸ் வெளியிட்டுள்ளது.

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.

நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். http://behindwoods.com/bgm8

மேலும் செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Ajith Kumar Vaalee Movie Reference in SivaKarthikeyan Don Movie

People looking for online information on Ajith Kumar Vaalee Movie, Ajithkumar, Don Movie, Priyanka Mohan, Sivakarthikeyan, SivaKarthikeyan Don Movie will find this news story useful.