Mr லோக்கல் தள்ளிப்போகிறது, மே 1ல் ரிலீஸ் இல்லை

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சிவகார்த்திகேயன் நடித்துள்ள Mr லோக்கல் திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Sivakarthikeyan's Mr Local will be releasing on May 17 worldwide

‘சிவா மனசுல சக்தி’, ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’ உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய எம்.ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘Mr லோக்கல்' திரைப்படத்தை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்துள்ளது.

‘வேலைக்காரன்’ திரைப்படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயனுடன் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா இணைந்து நடித்துள்ளார். காமெடி கலந்த காதல் திரைப்படமாக உருவாகியுள்ள இப்படத்தில் ராதிகா சரத்குமார், சதீஷ், யோகி பாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

ஹிப்-ஹாப் தமிழா ஆதி இசையமைத்துள்ள Mr லோக்கல் திரைப்படம் வரும் மே.17ம் தேதி ரிலீசாகவிருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. முன்னதாக இப்படம் உழைப்பாளர் தினத்தையொட்டி வரும் மே.1ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

விரைவில் இப்படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.