கொரோனா வைரஸ் நேரத்தில் மருந்து வாங்க போறவங்க..! - சிவகார்த்திகேயன் செம மெசேஜ்.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் சிவகார்த்திகேயன் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு முக்கியமான விஷயத்தை பகிர்ந்துள்ளார். 

மருந்து வாங்குபவர்களுக்கு சிவகார்த்திகேயன் விழிப்புணர்வு | sivakarthikeyan shares awareness of sathyaraj's daughter for medicines

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவர் நடித்த திரைப்படங்கள் பல ரசிகர்களை கவர்ந்து சூப்பர் ஹிட் அடித்துள்ளன. கடந்த ஆண்டு இவர் நடித்த நம்ம வீட்டுப்பிள்ளை திரைப்படமும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இவர் தற்போது அயலான், டாக்டர் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். 

இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு செய்தியை பகிர்ந்துள்ளார். நடிகர் சத்யராஜின் மகளான மருத்துவர் திவ்யா, மருந்து வாங்க செல்வபவர்களுக்கு ஒரு முக்கியமான விழிப்புணர்வை கொடுத்துள்ளார். இதுகுறித்து கூறிய அவர், ''லாக்டவுன் காலத்தில் மருந்து கடைகளுக்கு வரவேண்டிய சப்ளை வராமல் இருக்கலாம். வெளியூர்களிலும், வெளிநாடுகளிலிருந்தும் வர வேண்டிய மருந்துகள் லாக்டவுனால் மருந்துக் கடைக்கு வந்து சேர முடியாது. அதனால் சில மருந்து கடைகளில் பழைய மருந்துகள் இருப்பு இருக்கலாம். மக்கள் அனைவரும் இந்த நேரத்தில் வாங்கும் மருந்துகளின் காலாவதி தேதியை கவனமாக பார்த்த பின்னரே வாங்க வேண்டும். குறிப்பாக, குழந்தைகளுக்கு வாங்கும் பால் பவுடர், க்ரீன், ஷாம்பூ, பேபி ஆயில் போன்ற அனைத்து பொருட்களின் காலாவது தேதியை பார்த்து வாங்குவது மிக மிக அவசியம். காலாவதியான மருந்துகளை உபயோகிப்பதால் உடலில் பல உபாதைகள் வரலாம்.

மருந்து கடை வைத்திருப்பவர்களுக்கும் ஒரு வேண்டுகோள். மக்கள்  அனைவரும் கஷ்டப்பட்டு சம்பாதித்து சேர்த்து வைத்த காசில்தான் மருந்து வாங்க வருகிறார்கள். அவர்கள் வாங்கும் மருந்து அவர்களை குணப்படுத்தும் என்ற நம்பிக்கையில்தான் வாங்குகிறார்கள். தயவு செய்து உங்கள் கடைகளில் காலாவதியான மருந்துகளை டிஸ்போஸ் செய்ய ஒரு சிஸ்டம் அமைக்க வேண்டும்'' என தெரிவித்துள்ளார். இதை பதிவிட்டுள்ள சிவகார்த்திகேயன், அனைவரும் இந்த முக்கியமான விஷயத்தை கேளுங்கள் தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

மருந்து வாங்குபவர்களுக்கு சிவகார்த்திகேயன் விழிப்புணர்வு | sivakarthikeyan shares awareness of sathyaraj's daughter for medicines

People looking for online information on Corona Virus, Medical Shops, Sathyaraj, Sathyaraj Daughter, Sivakarthikeyan will find this news story useful.