கவினின் பிறந்தநாளுக்கு சிவகார்த்திகேயன் பட இயக்குநர் request - கவின் பதில் - ''கஷ்டம்னே!....''

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சரவணன் மீனாட்சி தொடரின் மூலம் வேட்டையனாகவே ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த கவின் 'நட்புனா என்னனு தெரியுமா ?' படத்தின் மூலம் ஹீரோவானார். பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர், தனது இயல்பான நடவடிக்கைகளால் ஏராளமான ரசிகர்களை பெற்றார்.

இதனையடுத்து அவர் 'லிஃப்ட்' என்ற படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக 'பிகில்' புகழ் அம்ரிதா நடித்துள்ளார். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் நடிகர் கவினுக்கு இன்று (22/06/2020) பிறந்தநாள் என்பதால் அவருக்கு பிரபலங்கள் முதல் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக சிவகார்த்திகேயனின் 'டாக்டர்' பட இயக்குநர் நெல்சன் திலீப்குமார், ''பிறந்த நாள் வாழ்த்துகள் கவின். உனது அடுத்த படத்துக்காக காத்திருக்கிறேன். இன்றிலிருந்தாவது கொஞ்சம் மெதுவா பேசமா கொஞ்சம் சத்தமா பேசு'' என்று தெரிவித்தார். அதற்கு பதிலளித்த கவின், கஷ்டம்னே... முயற்சி பண்றேன்.... எல்லாவற்றிற்கும் நன்றி'' என்று தெரிவித்தார்.

Sivakarthikeyan's Director has a special request to Kavin on his birthday ft Nelson Dilipkumar | கவினின் பிறந்தநாளை முன்னிட்டு சிவகார்த்திகேயன் பட இயக்�

People looking for online information on Doctor, Kavin, Nelson Dilipkumar will find this news story useful.