பிரபல யூடியூப் சேனல் எடுக்கும் படம் , சூப்பர் துவக்கம் கொடுத்த சிவகார்த்திகேயன், ரியோ...
முகப்பு > சினிமா செய்திகள்பிரபல யூடியூப் சேனலான பிளாக் ஷீப் (Black Sheep) ரியோ ராஜ் ஹீரோவாக நடித்திருந்த 'நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா' திரைப்படம் மூலம் திரையுலகில் அடியெடுத்து வைத்திருந்தனர். இந்த படத்தை சிவகார்த்திகேயன் தயாரித்திருந்தார்.

இதனையடுத்து பிளாக் ஷீப் நிறுவனம் தற்போது படத்தயாரிப்பில் இறங்கியுள்ளது. இந்த படத்தை 'புட் சட்னி', 'தமிழ் வணக்கம்' சேனல்களின் மூலம் தனது பிரபலமான ராஜ் மோகன் இயக்குகிறாராம். இந்த படத்தில் 'மைக் செட்' ஸ்ரீராம், 'பிளாக் ஷீப்' அயாஸ், அம்மு அபிராமி, தேஜூ உள்ளிட்டோர் முதன்மை வேடத்தில் நடிக்க, ஆர்ஜே விக்னேஷ்காந்த், சுட்டி அரவிந்த், அன்புதாசன் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர்.
இந்த படத்துக்கு சந்தோஷ் தயாநிதி இசையமைக்க, வாஞ்சிநாதன் ஒளிப்பதிவு செய்கிறார். இந்த திரைப்படம் தற்கால 2k கிட்ஸ் தலைமுறையின் கொண்டாட்டத்தை மையமாக கொண்டு எடுக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தை பிளாக் ஷீப்புடன் இணைந்து ராக்ஃபோர்ட் எண்டர்டெயின்மென்ட் நிறுவனமும் தயாரிக்கவுள்ளதாம்.
இந்த படத்தின் துவக்கவிழா மற்றும் பூஜை சமீபத்தில் நடைபெற்றது. அதில், நடிகர் சிவகார்த்திகேயன், ரியோ ராஜ், இயக்குநர் பத்ரி வெங்கடேஷ், விவேக் பிரசன்னா உள்ளிட்டோர் கலந்துகொண்டு குத்துவிளக்கு ஏற்றி வைத்தனர்.