'கடைக்குட்டி சிங்கம்' படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு இயக்குநர் பாண்டிராஜ், சிவகார்த்திகேயனை வைத்து ஒரு படத்தை இயக்கிவருகிறார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

இந்த படத்துக்கு டி.இமான் இசையமைக்க, நீரவ்ஷா ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படத்தில் பாரதிராஜா, சமுத்திரக்கனி, அனு இமாணுவேல், ஐஸ்வர்யா ராஜேஷ், யோகிபாபு, சூரி, நட்டி நட்ராஜ், ஆர்கே சுரேஷ் என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்து வருகின்றனர்.
எங்களுக்கு கிடைத்த தகவலின் படி இந்த படத்துக்கு மக்கள் திலகம் எம்ஜிஆரின் சூப்பர் ஹிட் படமான 'எங்க வீட்டு பிள்ளை' படத்தின் டைட்டிலை தேர்ந்தெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் இந்த டைட்டிலுக்கான உரிமை விஜயா புரொடக்ஷனிடம் இருப்பதால், படக்குழுவினர் அவர்களிடம் டைட்டிலை பயன்படுத்திக்கொள்ள அனுமதி கேட்டுள்ளனராம். அதற்கான பேச்சுவார்த்தை படக்குழுவினருக்கு சாதகமாக அமையும் என்றும் கூறப்படுகிறது.