பிரபல ஹீரோவுடன் நடிக்க போகும் ஷிவாங்கி... அவரே வெளியிட்ட பதிவு.... செம வைரல் இப்போ..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சிவகார்த்திகேயனின் 19வது திரைப்படம் குறித்த அதிரடி அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. பிரம்மாண்ட திரைப்படங்களை தயாரிக்கும் லைகா நிறுவனம் தற்போது அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர். திரு. சுபாஸ்கரன் தயாரிப்பில் நடிகர் சிவகார்த்திகேயனின் 19வது திரைப்படம் "டான்" என்று பெயரிடப்பட்டுள்ளது. இயக்குனர் அட்லீயிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த சிபி சக்ரவர்த்தி இயக்க, பிரபல இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்க உள்ளார். இத்திரைபடத்தை லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது, இதன் அதிகாரபூர்வ வீடியோவை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டது லைகா நிறுவனம்.

sivaangi to act with this popular actor படத்தில் நடிக்க போகும் ஷிவாங்கி

இந்நிலையில் இந்த அப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக டாக்டர் படத்தில் அவருடன் சேர்ந்து நடித்த  ஹீரோயின் பிரியங்கா மோகன் ஒப்பந்தமாகியுள்ளார். நடிகர் எஸ்.ஜே.சூர்யா முக்கிய வேடத்தில் நடிக்க தற்போது முன்னணி காமெடியனாக சூரி இந்த படத்தில் இணைந்துள்ளார். இந்நிலையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சி பற்றி தெரியாதவர்களே இருக்க முடியாது. வரவர பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு இணையான ரசிகர் பட்டாளம் இந்த நிகழ்ச்சிக்கும் உருவாகியுள்ளது. அந்த நிகழ்ச்சியில் தனது துறுதுறு பேச்சு மற்றும்  வெள்ளந்தி மனதினால் பலரது இதயங்களை கட்டிப்போட்டவர் ஷிவாங்கி. இந்நிலையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்த ஷிவாங்கி நடிகர் சிவகார்த்திகேயனின் டான் படத்தில் இணைந்துள்ளார். இது பற்றிய அதிகாரப்பூர்வமான அறிவிப்பை ஷிவாங்கி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த செய்தி ஷிவாங்கி மற்றும் குக் வித் கோமாளி ரசிகர்களை குஷியில் ஆழ்த்தியுள்ளது.

பிரபல ஹீரோவுடன் நடிக்க போகும் ஷிவாங்கி... அவரே வெளியிட்ட பதிவு.... செம வைரல் இப்போ..! வீடியோ

Tags : Shivangi

sivaangi to act with this popular actor படத்தில் நடிக்க போகும் ஷிவாங்கி

People looking for online information on Shivangi will find this news story useful.