ரசிகர்களை கவர்ந்த ஷிவாங்கி, அஷ்வின் கியூட் நடனம்... செம வைரலாகும் வீடியோ இதோ..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சி பற்றி தெரியாதவர்களே இருக்க முடியாது. வரவர பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு இணையான ரசிகர் பட்டாளம் இந்த நிகழ்ச்சிக்கும் உருவாகியுள்ளது. போட்டியாளர்களுக்கும் சரி, கோமாளிகளுக்கும் சரி தனித்தனியே ரசிகர் பட்டாளம் இருக்கிறது என்றே சொல்லலாம். போட்டியாளர்கள் கோமாளிகளை வைத்துக் கொண்டு சமைக்க படாதபாடு படும் காட்சிகள் ரசிகர்களை குலுங்கி, குலுங்கி சிரிக்க வைக்கிறது. அதிலும் முக்கியமாக புகழ், பாலா, ஷிவாங்கி, மணிமேகலை என கடந்த சீசனில் இருந்த கோமாளிகள் இந்த சீசனிலும் பங்கேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்த ஷோவிற்காக ரசிகர்கள் காத்திருந்து பார்க்கும் அளவிற்கு மிகப்பெரிய ரீச் அடைந்துள்ளது.

ashwin and shivangi cute dance with manimegalai ஷிவாங்கி, அஷ்வின் கியூட் நடனம்

அதிலும் முக்கியமாக இந்த சீசனை ஷிவாங்கி அஸ்வினுக்காகவே பலரும் பார்க்கின்றனர் என்றே சொல்லலாம். அந்த அளவுக்கு அஸ்வினுக்காக ஷிவாங்கியும் சுனிதாவும் போட்டி போட்டுக் கொள்ளும் சிறு சிறு சண்டைகளும் வயிற்றை பதம் பார்க்கும் அளவிற்கு சிரிப்பை வரவழைக்கிறது. ஏற்கனவே ஷிவாங்கிக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கின்றனர். அதிலும் அஸ்வின் ஷிவாங்கி செய்யும் கூடுதல் குறும்புகள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. அந்த வகையில் தற்போது இந்நிலையில் அஸ்வின், ஷிவாங்கி மற்றும் மணிமேகலை நடனமாடும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்கள் மிகவும் வைரலாகி வருகிறது. சிவகார்த்திகேயனின் 'ஒத்தையடி பாதையில' என்ற பாடலுக்கு அவர்கள் ஆடும் நடனம் அனைவரையும் வெகுவாக கவர்ந்துள்ளது.

ரசிகர்களை கவர்ந்த ஷிவாங்கி, அஷ்வின் கியூட் நடனம்... செம வைரலாகும் வீடியோ இதோ..! வீடியோ

மேலும் செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

ashwin and shivangi cute dance with manimegalai ஷிவாங்கி, அஷ்வின் கியூட் நடனம்

People looking for online information on Ashwin, Shivangi will find this news story useful.