www.garudabazaar.com

இது பதிலு!! மாஸ் காட்டிய சிவாங்கி! எதிர்கால கணவர் எப்படி இருக்கணும்? .. Beast -ல இருக்கீங்களாமே?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் நடிகை சிவாங்கி.

sivaangi opens up beast and future husband சிவாங்கி

முன்னதாக விஜய் டிவியின் சூப்பர் சிங்கரில் பாடகராக அறிமுகமான சிவாங்கி ஒரு பாடகராக பலராலும் அங்கீகரிக்கப்படவும் பாராட்டவும் பட்டார். இதனைத் தொடர்ந்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் ஒரு என்டர்டெயினராக அனைவரையும் கவர்ந்தார்.

தற்போது படங்களில் நடித்து வரும் சிவாங்கி தல அஜித் நடிக்கும் வலிமை, போனி கபூர் தயாரிப்பில் அருண்ராஜா காமராஜ் இயக்கும் ஆர்டிகள்15 ஆகிய திரைப்படங்களில் நடிக்கிறார்.

sivaangi opens up beast and future husband சிவாங்கி

இதில் ஆர்டிகள்15 இந்தியில் இருந்து தமிழில் ரீமேக் ஆகும் படம். நடிகர் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் இந்தப்படத்தில் சிவாங்கி ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இதேபோல் சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்து வரும் டான் திரைப்படத்திலும் சிவாங்கி நடிக்கிறார்.

sivaangi opens up beast and future husband சிவாங்கி

இந்தநிலையில் சிவாங்கி, தமது இன்ஸ்டாகிராமில் கேள்வி-பதில் அமர்வு ஒன்றில் ரசிகர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதில் சொல்லியிருக்கிறார். அதில்  “எந்த இயக்குனர் மற்றும் இசையமைப்பாளர் காம்போவில் பணிபுரிய விரும்புகிறீர்கள் என்று ரசிகர் ஒருவர் கேட்டதற்கு, நெல்சன் திலீப்குமார் - அனிருத் மற்றும் ஷங்கர் - ஏ.ஆர்.ரகுமான் ஆகியோரின் காம்போவில் பணியாற்ற விரும்புவதாக சிவாங்கி குறிப்பிட்டிருக்கிறார்.

sivaangi opens up beast and future husband சிவாங்கி

இதேபோல் “தளபதி விஜய் நடித்துவரும் Beast திரைப்படத்தில் நீங்கள் இருக்கிறீர்களாமே கேள்விப்பட்டோம்?” என்று ஒரு ரசிகர் கேட்டதற்கு, “ஆம் நானும் கேள்விப்பட்டேன்” என்று fun ஆக பதிலளித்திருக்கிறார்.

குறிப்பாக “உங்களுக்கு எந்த மாதிரி கணவர் அமைய வேண்டும்? introvert(மறைமுகமானர்)-ஆ? extrovert(வெளிப்படையானவர்)-ஆ?” என்று கேட்டதற்கு,  “அவர் எப்படியாக இருந்தாலும் அது விஷயமல்ல, நல்ல இதயம் இருந்தால் போதும். அதுதான் விஷயம்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

sivaangi opens up beast and future husband சிவாங்கி

இந்த பதிலை அளித்துவிட்டு, மீண்டும் சிவாங்கியே “ஐயோ ..கவிதை..கவிதை..” என்று தன் பதிலை மெச்சிக்கொண்டர். சிவாங்கியின் இந்த பதில்கள் வைரல் ஆகி வருகின்றன.

இது பதிலு!! மாஸ் காட்டிய சிவாங்கி! எதிர்கால கணவர் எப்படி இருக்கணும்? .. BEAST -ல இருக்கீங்களாமே? வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

sivaangi opens up beast and future husband சிவாங்கி

People looking for online information on Anirudh Ravichander, Beast, Nelson Dilipkumar, Sivaangi, Vijay will find this news story useful.