www.garudabazaar.com

"விஜய் சார ஸ்க்ரீன்ல பாத்ததும் Emotional ஆயிட்டேன்".. "தீ தளபதி" பாடகி ஹரிகா நாராயண் Exclusive!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் விஜய் நடிப்பில் அடுத்ததாக வாரிசு திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த திரைப்படத்தை பிரபல இயக்குனர் வம்சி பைடிப்பள்ளி இயக்கி வருகிறார்.

Singer Harika Narayan about thee thalapathy song and vijay

ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் பேனரில் தில் ராஜு மற்றும் ஷிரிஷ் தயாரிக்கும் இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார்.

இப்படத்திற்கு, ஹரி மற்றும் ஆஷிஷோர் சாலமன், விவேக் இணைந்து கதை & கூடுதல் திரைக்கதை எழுதி உள்ளனர். இசை மற்றும் ஒளிப்பதிவு முறையே எஸ் தமன் மற்றும் கார்த்திக் பழனி கவனித்து வருகின்றனர், கேஎல் பிரவீன் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார்.

வாரிசு திரைப்படம், 2023 ஆம் ஆண்டு பொங்கலுக்கு ரிலீஸ் ஆக உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, படத்தின் இறுதிக்கட்ட பணிகளும் மும்முரமாக நடைபெற்று வருகிறது. ஏற்கனவே படத்தின் போஸ்டர்கள் வெளியாகி இருந்த நிலையில், சமீபத்தில் இரண்டு பாடல்களும் வெளியாகி இருந்தது.

ரஞ்சிதமே என்ற முதல் சிங்கிளை நடிகர் விஜய் மற்றும் மானசி ஆகியோர் பாடி இருந்தனர். இதன் பின்னர் வெளியான தீ தளபதி என்ற பாடலை நடிகர் சிம்பு மற்றும் ஹரிகா நாராயண் ஆகியோர் பாடி இருந்தனர். முழுக்க முழுக்க ஃபயர் மோடில் இருந்த தீ தளபதி பாடலில் சிம்பு குரல் கவனம் ஈர்த்ததை போல, ஹரிகா நாராயண் குரலும் பெரிய அளவில் வரவேற்பை பெற்றிருந்தது.

Singer Harika Narayan about thee thalapathy song and vijay

இந்த நிலையில், சமீபத்தில் Behindwoods TV சேனலுக்கு பிரத்யேக பேட்டி அளித்திருந்த பாடகி ஹரிகா நாராயண், தீ தளபதி பாடல் குறித்து பல்வேறு சுவாரஸ்ய தகவலை பகிர்ந்து கொண்டார்.

அப்போது தீ தளபதி பாடல் குறித்து பேசி இருந்த ஹரிகா, "ஒரு சில தமிழ் பாடல்கள் பாடி உள்ளேன். ஆனால், அவை ரிலீஸ் ஆகவில்லை. தீ தளபதி பாடல் தான் முதலில் வெளியாகி உள்ளது. சின்ன போர்ஷன் தான், ஆனால் இதற்கு கிடைத்த ஆதரவு பெரிது. விஜய் சாருக்கு ஒரு Tribute போல இந்த பாட்டு என தமன் தெரிவித்தார். சினிமாவில் அவர் அறிமுகமாகி 30 ஆண்டுகள் ஆனதையும் குறிப்பிடும் வகையில் பாடல் இருக்கும் என கூறினார்.

முதலில், பாடலை முழுக்க கேட்டிருந்தேன். ஆனால், லிரிக் வீடியோ பார்த்த பிறகு அதனை மீண்டும் மீண்டும் Loop மோடில் கேட்க ஆரம்பித்தேன். தியேட்டரிலும் இந்த பாட்டை பார்க்க ஆவலாக இருக்கிறேன். விஜய் சாருக்காக பாடியது கனவு நிஜமான தருணமாக இருக்கிறது. மேலும், எனது குரலில் விஜய் சார் லிரிக் வீடியோவில் தோன்றியதைக் கண்டு எமோஷனல் ஆகி விட்டேன். தொடர்ந்து அதனை பார்த்துக் கொண்டே இருந்தேன்" என தெரிவித்துள்ளார்.

Singer Harika Narayan about thee thalapathy song and vijay

அதே போல, ஆந்திராவில் வாரிசு படத்திற்கான எதிர்பார்ப்பு குறித்து பேசிய ஹரிகா, "அங்கே உள்ள மக்கள் வாரிசு படத்தின் அப்டேட் குறித்து கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். அங்கே படத்திற்கு பெரிய அளவில் எதிர்பார்ப்பு உள்ளது. தமன் சாருடன் இணைந்து US பகுதியில் Concert செய்த போதும் அங்கே வந்த ரசிகர்கள் பலர் வாரிசு அப்டேட் கேட்டார்கள். அந்த சமயத்தில் ரஞ்சிதமே கூட ரிலீஸ் ஆகவில்லை. அங்கேயும் வாரிசு படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகம் இருப்பது ஆச்சரியமாக இருந்தது" என தெரிவித்துள்ளார்.

"விஜய் சார ஸ்க்ரீன்ல பாத்ததும் EMOTIONAL ஆயிட்டேன்".. "தீ தளபதி" பாடகி ஹரிகா நாராயண் EXCLUSIVE! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Singer Harika Narayan about thee thalapathy song and vijay

People looking for online information on Harika Narayan, Thee Thalapathy, Varisu, Vijay will find this news story useful.