Reliable Software
www.garudabazaar.com

'சிம்புவின் மாநாடு படத்தின்' அடுத்த லெவல் மாஸ் அப்டேட்... கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சிம்பு நடித்த ஈஸ்வரன் திரைப்படம் கடந்த பொங்கலுக்கு வெளியானதைத் தொடர்ந்து சிம்புவின் அடுத்தடுத்த படங்களுக்கு வரவேற்பு அதிகமாக இருக்கிறது.

Simbu Maanaadu Next level massive update சிம்பு மாநாடு

நடிகர் சிம்பு தற்போது மீண்டும் மிகவும் ட்ரெண்டிங்கில் இருக்கிறார். காதலர் தினத்தன்று தமது செல்ல நாயுடன் பேசிய வைரல் பேச்சு, குக் வித் கோனாளி நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்றது என சிம்பு அவ்வப்போது ஆக்டிவாக இருந்துவருகிறார்.

குறிப்பாக சிம்புவின் ரசிகர்கள் சிம்புவின் அடுத்தடுத்த படப்பிடிப்புகளை பார்த்து உற்சாகமாய் இருக்கின்றனர். அதில் நடிகர் சிம்பு நடித்த ஈஸ்வரன் திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் சிம்பு மாநாடு திரைப்படத்தில் பிஸியாகினார். மாநாடு திரைப்படத்தில் சிம்பு நடித்த ஷூட்டிங் புகைப்படங்கள் வைரலாகி அவரது ரசிகர்களிடையே குஷியை ஏற்படுத்தின.

Simbu Maanaadu Next level massive update சிம்பு மாநாடு

இந்த படத்தில் நடிகர் சிம்புவுடன் எஸ்.ஜே.சூர்யா, கல்யாணி பிரியதர்ஷன், பிரேம்ஜி உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். இந்த திரைப்படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். இந்த படத்தை சுரேஷ் காமாட்சி தயாரித்திருக்கிறார்.

வெங்கட்பிரபு இயக்கத்தில் வெளியாக உள்ள இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து, இந்தப் படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாக சுரேஷ் காமாட்சி ட்விட்டர் பக்கத்தில் அறிவித்திருக்கிறார். இந்த புகைப்படங்கள் மீண்டும் வைரலாகி வருகின்றன. இதனால் சிம்பு ரசிகர்கள் மிகுந்த உற்சாகமடைந்தனர்.

ALSO READ: "ADMK logo பண்ண சொல்லி எம்ஜிஆர் கேட்டார்".. மறைந்த பாண்டுவின் மறுபக்கம்.. Throwback interview!

தொடர்புடைய இணைப்புகள்

Simbu Maanaadu Next level massive update சிம்பு மாநாடு

People looking for online information on Maanaadu, Silambarasan TR, Suresh Kamakshi, Suresh Kamatchi, Venkat Prabhu will find this news story useful.