Reliable Software
www.garudabazaar.com

சிம்பு நடிக்கும் மாநாடு... மரண மாஸ் அப்டேட்டை வெளியிட்ட படக்குழுவினர்... குஷியில் ரசிகர்கள்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக வலம் வருபவர் சிம்பு. இவர் நடிப்பில் பொங்கலுக்கு வெளியான ஈஸ்வரன் திரைப்படம் திரையரங்குகளில் ரிலீசானது. இதை தொடர்ந்து சிம்பு வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு, சில்லுன்னு ஒரு காதல் கிருஷ்ணா இயக்கத்தில் பத்து தல உள்ளிட்ட படங்களில் வரிசையில் இருக்கிறது. இந்த வருடம் சிம்புவின் ரசிகர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான வருடம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

simbu maanaadu important update released மாநாடு அப்டேட்டை வெளியிட்ட படக்குழுவினர்

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்திருக்கும் படம் 'மாநாடு' . கல்யாணி ப்ரியதர்ஷினி, பாரதிராஜா, எஸ்.ஜே.சூர்யா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் மாநாடு படத்தின் டீசரை சிம்புவின் பிறந்தநாளான பிப்ரவரி 3ஆம் தேதி பிரபல இயக்குனர் மற்றும் நடிகரான அனுராக் காஷ்யப் வெளியிட்டார். சுரேஷ் கமாஷி தனது சமூக ஊடக தளத்தில் ஒரு முக்கியமான அறிவிப்பை  பகிர்ந்துள்ளார் "மாநாடு திரைப்படத்தின் முதல் சிங்கிள் விரைவில் உங்களை வந்தடையும். இந்த பாடலை  ரம்ஜான் தினத்தன்று வெளியிடப்படும் என்று அறிவிப்பதில் மகிழ்ச்சி.. காத்திருங்கள்." என்று கூறியுள்ளார்.

Tags : Simbu, Maanaadu

தொடர்புடைய இணைப்புகள்

simbu maanaadu important update released மாநாடு அப்டேட்டை வெளியிட்ட படக்குழுவினர்

People looking for online information on Maanaadu, Simbu will find this news story useful.