www.garudabazaar.com

"பட்டாசு தான்".. ‘மாநாடு’ படத்தின் அடுத்த அப்டேட்.. வைரலாகும் சிம்புவின் ஃபோட்டோ!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள மாநாடு படம், தீபாவளிக்கு வெளியாவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

Silambarasan dubbing Maanaadu mass update viral pic

இந்நிலையில், அப்படம் தீபாவளிக்குப் பதில் நவம்பர் 25-ஆம் தேதி வெளியாகும் என தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அறிவித்தார்.

இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா, கல்யாணி பிரியதர்ஷின், கருணாகரன், பிரேம்ஜி அமரன் நடிக்கிறார். வெங்கட் பிரபு இயக்கிய இந்த படத்துக்கு, யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

ஏற்கனவே இந்த படத்தின் சிங்கிள், டிரைலர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றன. இந்த நிலையில் மாநாடு படம் தீபாவளி ரிலீஸ் ரேஸில் இருந்து தள்ளிப்போகி, நவம்பர் 25-ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என குறிப்பிடப்பட்டிருந்தது.

இதனிடையே நடிகர் சிம்பு மாநாடு படத்துக்கு டப்பிங் பேசி முடித்திருப்பதாக புகைப்படங்களுடன் கூடிய தகவல்கள் கிடைத்துள்ளன. முன்னதாக இப்படத்துக்கு டப்பிங் பேசியிருந்த எஸ்.ஜே.சூர்யா, படத்தை வெகுவாக பாராட்டி பேசியிருந்தார்.

தொடர்புடைய இணைப்புகள்

Silambarasan dubbing Maanaadu mass update viral pic

People looking for online information on Maanaadu, Silambarasan TR, Sj suryah, Suresh Kamatchi, Venkat Prabhu will find this news story useful.