Kaateri logo top
www.garudabazaar.com

"யார் பேராச்சும் மறந்துட்டனா..?" - 'விருமன்' பட விழாவில் மகள் அதிதிக்கு ஷங்கரின் க்யூட் Reminder.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கார்த்தி மற்றும் அதிதி ஷங்கர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் விருமன். இப்படத்தில் இவர்களுடன் ராஜ்கிரண், பிரகாஷ்ராஜ், கருணாஸ், சூரி, வடிவுக்கரசி, சிங்கம்புலி, மனோஜ் பாரதிராஜா, ராஜ்குமார், இந்துமதி, வசுமித்ரா, நந்தினி, ஹலோ கந்தசாமி, வேல்முருகன், TSR, ஓ.ஏ.கே.சுந்தர், ரிஷி மற்றும் பலர் நடிக்கிறார்கள்.

shankar cute reminder to aditi during viruman audio launch

இயக்குநர் முத்தையா உடன் முதன் முறையாக இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இப்படத்தில் இணைகிறார். S.K.செல்வகுமார் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். அனல் அரசு ஸ்டன்ட் காட்சிகளை இயக்கியுள்ளார். தமிழகம் முழுவதும் சக்தி பிலீம் பேக்டரி நிறுவனம் ஆகஸ்ட் 12 ஆம் தேதி இப்படம் ரிலீஸ் செய்யவுள்ளதாக  அறிவிக்கப்பட்டுள்ளது.

shankar cute reminder to aditi during viruman audio launch

இப்படத்தின் ஆடியோ ரிலீஸில் பேசிய இப்படத்தின் நாயகியும், இயக்குநர் ஷங்கரின் மகளுமான அதிதி ஷங்கர் பேசும்போது, இசையமைப்பாளர், இயக்குநர், ஒளிப்பதிவாளர், தயாரிப்பாளர் சூர்யா மற்றும் 2டி எண்டர்டெயின்மெண்ட்டை சேர்ந்த ராஜசேகர், தங்கதுரை மற்றும் பலருக்கு தம்மை இந்த முதல் படத்தில் நம்பிக்கை வைத்து கொண்டு வந்ததற்காக நன்றி தெரிவித்தார். 

shankar cute reminder to aditi during viruman audio launch

மேலும் சூர்யா தேசிய விருது பெற்றதற்காக வாழ்த்து தெரிவித்த  அதிதி ஷங்கர், வேறு யார் பெயரையேனும் விட்டிருந்தால் மன்னிக்கணும் என்று சொல்லிக் கொண்டிருக்கும்போதே, கீழிருந்து இயக்குநர் ஷங்கர் கார்த்தி பெயரை செய்கையாக சொல்லி நினைவுபடுத்த, அதற்குள் நியாபகம் வந்துவிட்ட அதிதி, ‘கார்த்தி சார மறப்பேனே..’ என சொல்லி பேசத் தொடங்கிவிட்டார்.

shankar cute reminder to aditi during viruman audio launch

ஒரு அப்பாவாக தன் மகளை இத்தனை எளிமையாகவும் பணிவாகவும் வளர்த்திருக்கும் ஷங்கர், மிகவும் க்யூட்டாக கைடு பண்ணுவது குறித்து ரசிகர்கள் சிலாகித்து வருகின்றனர்.

தொடர்புடைய இணைப்புகள்

shankar cute reminder to aditi during viruman audio launch

People looking for online information on Aditi Shankar, Bharathiraja, Karthi, Shankar, Suriya, Viruman Audio Launch Viruman, Yuvan Shankar Raja will find this news story useful.