Kaateri logo top
www.garudabazaar.com

VIDEO: "இது தான் கமல் சார் கொடுத்த ரோலக்ஸ் ‌வாட்ச்".. ரசிகர்களிடம் கை காட்டி சொன்ன சூர்யா!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

2D நிறுவனம் சார்பில் நடிகர் சூர்யா தயாரிக்க, முத்தையா இயக்கத்தில், கார்த்தி நடித்துள்ள படம், ’விருமன்’.

Actor Suriya showing Rolex watch to fans at Madurai

Also Read | "சூர்யாவோட அந்த சீன் நான் நடிக்கும்போது" - பாரதிராஜா நினைவுபடுத்தியதும் சிரித்த சூர்யா.!

இந்தப் படத்தை நடிகர் சூர்யா & ஜோதிகாவின் 2டி என்டர்டெயின்ட்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது.

இப்படம் ஆகஸ்ட் மாதம் 12 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என்று  அறிவிக்கப்பட்டுள்ளது. 

‘விருமன்’ படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரையில் உள்ள ராஜா முத்தையா மன்றத்தில் நேற்று  நடந்தது. இந்த விழாவில் படத்தின் டிரெய்லரும் வெளியிடப்பட்டது.

இந்த விருமன் இசை வெளியீட்டு விழாவில், இயக்குநர் பாரதிராஜா,  இயக்குநர் ஷங்கர், நடிகர்கள் சூர்யா, கார்த்தி, சூரி, நடிகை அதிதி ஷங்கர், இயக்குநர் முத்தையா, இணைத் தயாரிப்பாளர் ராஜசேகர் கற்பூர சுந்தரபாண்டியன்  உட்பட படக்குழுவினர் பங்கேற்றனர்.

Actor Suriya showing Rolex watch to fans at Madurai

விழாவில் பேசிய தயாரிப்பாளர் சூர்யா, "உங்களால எனக்கு கிடைச்ச பரிசு இது.. கமல் சார் கொடுத்த ரோலக்ஸ் வாட்ச் இது தான் அது" என கூறினார். இந்த வீடியோ தற்போது ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

கமல்ஹாசன் நடித்த ‘விக்ரம்’ திரைப்படத்தில்  நடிகர் சூர்யா, ரோலக்ஸ் எனும் கதாபாத்திரத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்தார்.

Actor Suriya showing Rolex watch to fans at Madurai

இதற்காக கமல்ஹாசன், சூர்யாவுக்கு ரோலக்ஸ் கைக்கடிகாரத்தை பரிசாக அளித்தது குறிப்பிடத்தக்கது.

உலகம் முழுவதும் விக்ரம் படம் மிகப்பெரிய வசூலை அள்ளிக்குவித்தது. கடந்த 2 ஆண்டுகளில் வெளியான தமிழ் படங்களில் அதிக வசூல் செய்த படமாக விக்ரம் உருவெடுத்தது.

Actor Suriya showing Rolex watch to fans at Madurai

இதுவரை வெளியான தமிழ் படங்களில் தமிழ்நாட்டில் அதிக வசூல் செய்த படமாக விக்ரம் உருவெடுத்தது. படத்தின் வெற்றிக்கு காரணமான இயக்குனர் லோகேஷ் கனகராஜுக்கு'லெக்ஸஸ்'ரக காரை பரிசாக அளித்தார் கமல்ஹாசன். அதேபோல் உதவி இயக்குனர்களுக்கு இருசக்கர வாகனங்களை பரிசளித்தார் தயாரிப்பாளர் கமல்ஹாசன்.

Also Read | "Suriya -க்கு நிறைய Troubles.. தூக்கி எறிஞ்சான் ஜெய்பீம்-னு" - பாரதிராஜா Emotional Speech

VIDEO: "இது தான் கமல் சார் கொடுத்த ரோலக்ஸ் ‌வாட்ச்".. ரசிகர்களிடம் கை காட்டி சொன்ன சூர்யா! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Actor Suriya showing Rolex watch to fans at Madurai

People looking for online information on Madurai, Suriya, Suriya showing Rolex watch to fans will find this news story useful.