அட்லி இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து வரும் படம் பிகில். இந்த படத்தில் நயன்தாரா, யோகி பாபு, விவேக், ஜாக்கி ஷெராஃப், டேனியல் பாலாஜி உள்ளிட்ட பெரும் நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடித்து வருகின்றனர்.

இந்த படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, ஜிகே விஷ்ணு ஒளிப்பதிவு செய்து வருகிறார். இந்த படத்தை ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது.
இந்த படத்தின் கிளைமேக்ஸ் காட்சிகள் நாளை முதல் படமாக்கப்படவிருப்பதாக எங்களுக்கு தகவல்கள் கிடைத்திருக்கின்றன. இந்நிலையில் ஐபிஎல் போட்டி ஒன்றில் ஷாரூக்கானும், இயக்குநர் அட்லியும் அமர்ந்திருந்து பார்த்தனர்.
இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானது. இதனையடுத்து ஷாருக்கான் இந்த படத்தில் வில்லனாக செய்திகள் வெளியானது. எங்களுக்கு கிடைத்த தகவலின் படி அந்த செய்தியில் உண்மையில்லை என்று கூறப்பட்டது.
இந்நிலையில் விஜய்யும் ஷாருக்கானும் ஒரு பாடலில் இணைந்து நடனமாடவிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதனையடுத்து எங்களுக்கு கிடைத்த தகவலின் படி இந்த செய்திகள் பொய்யானவை என்று தெரியவந்துள்ளது.