'தளபதியின் 'மெர்சல்' படத்துல ஏன் நடிக்கல?' - ஜோதிகா விளக்கம்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

'காற்றின் மொழி' படத்தின் மாபெரும் வரவேற்புக்கு பிறகு ஜோதிகா நடித்துள்ள படம் 'ராட்சஷி'. இந்த படம் வருகிற ஜூலை 5 ஆம் தேதி வெளியாகவுள்ளது. டிரீம் வாரியர்ஸ் சார்பில் இந்த படத்தை எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு, எஸ்.ஆர்.பிரபு இணைந்து தயாரித்துள்ளனர்.

Jyothika speaks about Ratchasi and Thalapathy Vijay's Mersal

ஷான் ரோல்டன் இசையமைத்துள்ள இந்த படத்தை கௌதம் ராஜ் எழுதி இயக்கியுள்ளார். இந்த படத்தில் பூர்ணிமா பாக்யராஜ், சத்யன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இந்நிலையில் இந்த படம் குறித்து Behindwoods Tvக்கு ஜோதிகா பிரத்யேகமாக பேட்டியளித்தார். அப்போது மெர்சல் படத்தில் நித்யா மேனன் வேடத்துக்கு முதலில் உங்களிடம் அனுகியதாக செய்திகள் வெளியானது.

அதுகுறித்து சொல்லுங்கள் என தொகுப்பாளர் அக்னி ஜோதிகாவிடம்  கேட்டார். அதற்கு பதிலளித்த அவர்,  ''ஆமா, எங்களுக்கு கொஞ்சம் ஸ்கிரிப்ட் மேல கருத்து ரீதியாக வேறுபாடு இருந்தது. அதனால பண்ணல'' என்றார்.

'தளபதியின் 'மெர்சல்' படத்துல ஏன் நடிக்கல?' - ஜோதிகா விளக்கம் வீடியோ