பிக் பாஸ் 3 வீட்டில் ராஜ வாழ்க்கை வாழ்வது என்றால் அது கவின் தான். ஒரே நேரத்தில் லாஸ்லியா, சாக்ஷி, அபிராமி என்று ரவுண்டு கட்டி கடலை போடுகிறார். அதிலும் குறிப்பாக பெண்களுடன் சேர்ந்து புல்வெளியில் படுத்துக் கொண்டு அவர் கடலை போட்டதை பார்த்து சிங்கிள்ஸ் எல்லாம் கடுப்பானார்கள்.
இந்நிலையில் கவின் பற்றிய ப்ரொமோ வீடியோ வெளியாகியுள்ளது.
காதலில் சொதப்புவது எப்படி என்று மோகன் வைத்யா கேட்க, காதலித்து விட்டு எஸ்கேப் ஆகணும் என்று முடிவு செய்துவிட்டால் அவங்க நம் மீது பழி போடும் முன்பு நாம் முந்திக் கொள்ள வேண்டும் என்று கவின் தெரிவித்துள்ள ப்ரொமோ வீடியோ வெளியாகியுள்ளது. ஒரு காதலில் சொதப்புவது ஓகே, ஆனால் 2, 3 பேரை காதலிக்கும்போது சொதப்பினாயே அது எப்படி என்று சேரன் கவினிடம் கேட்டுள்ளார்.
முக்கியமான விஷயம் என்னவென்றால் 3 பேரையும் ஒரே இடத்தில் வைத்துக் கொண்டு லவ் பண்ணக் கூடாது என்று கவின் கூறியதை கேட்டு லாஸ்லியாவுக்கு அப்படி ஒரு சிரிப்பு. சாக்ஷி முகத்திலும் சிரிப்பு தான் உள்ளது. ஆனால் அபிராமி தான் முகத்தை தொங்கப் போட்டுக் கொண்டுள்ளார். கவின் சொன்ன பதிலை கேட்ட சேரன் மாட்டிக்கிட்டியா என்று கேட்க அநேகமா இந்த வீட்டில் மாட்டிக் கொள்வேன் என்று நினைக்கிறேன் என்றார்.
GIRLFRIEND- ஐ கழற்றிவிடுவது எப்படி? SINGLE பசங்க சாபம் உன்ன சும்மா விடாதுடா..! BIGG BOSS PROMO இதோ வீடியோ